முத்து

‘முத்து’ என்பது மிகுந்த வேதனையில் உருவாகிறதென்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு சிறுமணல் சிப்பியின் உடலுக்குள் புகுந்து விடுகிறது. அந்த மணல் அதன் உடலில் ஏற்படுத்தும் உறுத்தலிலிருந்து பால்போன்ற ஒரு திரவத்தைச் சுரந்து அந்த மணலை மூடிவிடுகிறது.

இவ்வாறு ஒரு முத்து உருவாகுவதில் எவ்வளவு வேதனை உள்ளடங்கியிருக்கிறது! இந்த முத்துக்கள் அபூர்வமானவை. முத்துக்குளிப்பவன் ஒரு சிப்பியில் ஒரு முத்தை கண்டெடுக்கும் போது இதையெல்லாம் உணருகிறான். ஞானமும் இதைப் போன்றதே. ஞானம் பெரும்பாலும் வேதனைகளிலிருந்து பிறந்தவையே. நாம் ஒரு காரியத்துகாக முயற்சிக்கிறோம். அப்போது நாம் ஒரு தவறு செய்கிறோம். நாம் நம் முயற்சியில் தோல்வி அடைகிறோம். இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம். நாம் செய்த தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வோமானால், அது விலையேறப் பெற்றதாயிருக்கும். இதை நாம் உணராவிட்டால் நாம் முட்டாள்கள் ஆவோம்.

பெரும்பாலான ஞானத்தை விளக்கும் தேவனுடைய வார்த்தைகள் வேதாகமத்தில் ‘ஞான இலக்கியம்’ என்று கூறப்படும் பகுதியில் உள்ளது. அப்பகுதியில் சங்கீதங்கள், நீதிமொழிகள், பிரசங்கி மற்றும் உன்னதப்பாட்டு ஆகியவை அடங்கும்.

*சங்கீதங்கள் அகத்தூண்டல் ஏற்படுத்தும் எபிரேய செய்யுள்கள்.
*நீதிமொழிகள் கருத்தாழம் கொண்ட, அழகான பழமொழிகள்
*உன்னதப்பாட்டு என்பது அன்புக்கு விடுக்கப்படும் ஒரு எழுச்சிப்பாடல்.
*பிரசங்கி என்பது ‘மாயை’ என்னும் ஒரே மையக்கருத்தை வலியுறுத்தும் ஞானக்களஞ்சியம்.

தேவன் இல்லாத தனிமனிதனின் வாழ்க்கை மாயையானது. பிரசங்கியில் காணப்படும் ஞானம், வாழ்க்கையில் நாம் செயல்படுத்தக்கூடியது. இதன்படி நாம் வாழ்ந்தால் நம் வாழ்க்கை பொருள் நிறைந்ததாகவும், பயன்மிக்கதாகவும் மாறிவிடும்

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE