ஜார்ஜ் முல்லரின் உறுதியான ஜெபம்

பிரசித்தி பெற்ற ஜார்ஜ் முல்லரைக் குறித்து கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் ஒவ்வொருநாளும் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பிடித்து ஜெபிப்பது வழக்கம். ஒருநாள் அவர்களுடைய அனாதை விடுதியிலுள்ள இரண்டாயிரம் பிள்ளைகளும் சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு மேஜையைச் சுற்றிலும் உட்கார்ந்து விட்டார்கள்.
     ஆனால் சமையல் அறையிலே உணவு ஒன்றுமில்லை. ஜார்ஜ் முல்லரோ தன் அறையிலே முழங்காற்படியிட்டு சங்கீதம் 68:5-ன் மேல் தன் விரலை வைத்து, “தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்” என்று சொல்லி ஜெபித்துக் கொண்டேயிருந்தார்.
     சில நிமிட நேரம் கூட ஆகவில்லை. திடீரென்று அவருடைய அனாதை விடுதிக்கு முன்பாக பெரிய பெரிய லாரிகள் வந்து நின்றன. அதிலிருந்து உணவு வகைகள் இறக்கப்பட்டன . அங்குள்ள பிள்ளைகள் எல்லாருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தார்கள்.
    என்னவென்று விசாரித்தபோது அந்த ஊரில் உள்ள மிக முக்கியமான ஒரு நபர் வீட்டிலே ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தினார்கள் என்றும் எதிர்பாராத விதமாக அங்கே ஒரு மரணம் சம்பவித்தபடியினால் விருந்து ரத்து செய்யப்பட்டது என்றும் அந்த விருந்தின் உணவு வகைகளை இங்கே கொண்டுவந்திருக்கின்றார்கள் என்றும் அவர் அறிந்தபோது தேவனை மகிமைப்படுத்தினார்.
     நண்பர்களே.. வாக்குத்தத்தங்களெல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறதை நீங்கள் நிச்சயமாகவே கண்டுகொள்ளுவீர்கள்.
     “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே” (எபி. 10:23)
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE