தம்பியைத் தேடி நான் போகிறேன்…

இளைய மகன், தன் அன்புத் தந்தையையும், அருமையான அண்ணனையும் விட்டுப் பிரிந்து ஒரு கொள்ளைக் கூட்டத்தாரிடம் போய் சோர்ந்து கொண்டான்.
   தந்தை துக்க சோகத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஒரு முறை தம் ஊழியர்களை அழைத்து என் மகனை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உருகி வேண்டினார். ஆனால் இளைய மகனின் அநியாய அக்கிரமங்களை கேள்வியுற்ற ஊழியர்கள் துணிந்து தேடிப்போக மனமற்றிருந்தார்கள். தந்தையின் மனநிலையை அறிந்த மூத்தமகன் தம்பியைத் தேடி நான் போகிறேன் என்று முன் வந்தான். தந்தைக்கு அது பிரியமில்லை. ஆயினும் இளைய மகன் மீதிருந்த பாசத்தினால் சம்மதித்தார்.
    மூத்தவன் மிகுந்த தைரியத்துடன் வனத்தினுள் புகுந்து கள்ளர்களின் இரகசிய இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விட்டான்.
    கொடிய கொள்ளைக் கூட்டம் அவனைப் பிடித்து இம்சித்து குற்றுயிரும் குறைஉயிருமாக்கினார்கள். கூட்டத்தில் அவனது தம்பியுமிருந்தான்.என் தந்தை எனக்கு இட்ட பணியைச் செய்து முடித்து விட்டேன். என் தம்பியை கள்வர் கூட்டத்திலிருந்து விடுவித்து என் தகப்பனிடம் சேர்க்கவே வந்தேன். என்று சொல்லி அவனின் உயிர் பிரிந்தது.
     அண்ணனின் மரணத்திற்குப் பின்னே தம்பிக்கு உணர்வு தட்டியது. அண்ணனின் மாயமற்ற அன்பை நினைத்துத் தம்பி அழுதான். மற்றத் திருடர்களுக்குத் தெரியாமல் தந்தையை நோக்கி ஓடினான். மன்னிக்கும் படி அருள் தொண்டனாக மாறினான்.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE