பாவமாகிய சட்டை

பாம்பு மாதமொருமுறை சட்டையைக் கழற்றுவது வழக்கம் எத்தனைமுறை அதன் வெளித்தோலைக் கழற்றினாலும். அதன் சுபாவம் மாறாது. விஷமும் குறையாது. பாம்பு பாம்புதான்.

அப்படியே ஒரு பாவியும் ஆழ்கடல் கடந்து வெளிநாடு சென்றாலும் மலையேறி தீவுத்திடல்கள் போனாலும் தேகமாகிய சட்டையைக் கழற்றினாலும் பாவிதான்.

அதற்கு மாறாக ஒரு பட்டுப் பூச்சியைப் பாருங்கள். அது ஒரு கூட்டுக்குள் உணவில்லாமல் வேதனையை அனுபவிக்கிறது. சற்றுப்பின் அந்த கூடு தகர்கிறது. அதிலிருந்து ஓர் அழகிய பட்டுப்பூச்சி வெளிவருகிறது. இந்தப்பட்டுப் பூச்சியைப்போல மறு ரூபம் பெறுவதற்கு மனஸ்தாபப்பட்டு பாவத்தை விட்டு விலகி வாழ்ந்தால் போதும். அப்பொழுதுதான் புதுப்படைப்பு ஆவோம். புறம்பான மாறுதல்கள் போதாது. உள்ளான மனமாறுதல் வேண்டும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE