பாவத்தை.. பிரசங்கிக்க வேண்டாம்

வேதாகமக் கல்லூரில் பட்டம்பெற்ற இளைஞன். ஒருவர் ஒரு சபையில் போதகாரக நியமிக்கப்பட்டார். மிகவும் உற்சாகம் நிறைந்த அந்த இளம்போதகர் தன் சபையினர் செய்யும் பாவச் செயல்களை விட்டுவிட பிரசங்கிக்கும்படியான தீர்மானத்தோடு முதல் ஞாயிறன்று புகைபிடிப்பதினால் தனக்கும் மற்றவர்களுக்கும் வரும் தீமைகளை விளக்கினார். பிரசங்கத்துக்குப்பின் சபையின் முக்கியதஸ்தர் ஒருவர் போதகரிடம் வந்து இந்த சபையில் பெரும்பாலோர் புகையிலை பயிரிடுகிறவர்கள். ஆகையால் புகைப்பதைப் பற்றி பிரசாங்கிக்க வேண்டாம் என எச்சரித்தார்.
இரண்டாம் ஞாயிறு வந்தபோது மதுபானம் அருந்துவதால் வரும் தீமைகளையும், குடிக்காரர்கள் பரலோகம் செல்ல முடியாது என்றும் பிரசங்கித்தார். பிரசங்கம் முடிந்தபின் அந்த சபையின் மூப்பர் ஒருவர் மிகவும் விசனம் அடைந்தவராய், இங்குள்ள சபையில் மூன்றில் ஒருபங்கு மதுபான வியாபாரிகள் என்று உனக்குத் தெரியாதா? ஆதலால் இனிமேல் மதுபானத்தைப் பற்றி பிரசாங்கிப்பதை விட்டுவிடு என எச்சரித்தனர். மூன்றாம் ஞாயிறுவந்தபோது போதகர் சூதாட்டம் எத்தனை கொடியது; எந்தக்கிறிஸ்தவனும் சூதாட்டத்தில் ஈடுப்படக்கூடாது என்றும் பிரசங்கித்தார். சபையில் அநேகருக்கு இது மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது. சபையார் அவருக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்தபோது, அடுத்த ஞாயிறு அன்று அவர் ரஷ்யா, அமெரிக்க உறவைப்பற்றி மிகத்தெளிவாய் பேசினார். மக்களின் பாவத்தைப் பற்றி பேசுவதைவிட்டு விட்டார். அதற்குப்பின் அவருக்கு அந்த சபையில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோரும் அவரை நேசித்தனர்.
இன்றும் அநேக ஊழியர்கள் யாரையும் புண்படுத்தாமல், பாவத்தைப் பாவம் என்று கண்டிக்காமலே பிரசங்கிக்கின்றனர். மிகவும் கண்டிப்போடு பேசுகிற பிரசங்கிகளை அநேகர் விரும்புவதில்லை. பாவம் சுட்டிக்காட்டப்படும்போது கோபமும் எரிச்சலும் அடைவதற்குப் பதிலாக பாவ அறிக்கை செய்து பாவ மன்னிப்பு பெறுவதே சால சிறந்ததாகும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE