தோலைக் கருப்பாக்கிய ஊழியர்.

ஆப்பிரிக்க மக்களை அதிகம் நேசித்த ஜான் ஹவார்டு என்ற வெள்ளைக்கார மனிதர் ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஊழியம் செய்துவந்தார்.அவர் அங்குள்ள மக்களை போல் காணப்படவேண்டுமென்று விரும்பி தனது வெள்ளைத் தோலைக் கருப்பாக்க முயற்சித்தார். அதற்காகத் தன்னுடைய சரிரத்தில் பலவகைக் கொடிய விஷ மருந்துகளைப் பூசி சூரிய ஒளியில் பல நாட்கள் விழுந்து கிடந்தார். தார்போன்ற ஒரு வித கருப்புத்தைலத்தையும் தம் உடல் மீது பூசிக்கொண்டு இப்படியே தம் தோலைப் படிப்படியாகக் கருமையாக்கிக் கொண்டு வந்தார். தம்மை நீக்ரோ மக்களுக்கு ஒப்பாக மாற்றிய பின்னர் அவர்கள் மத்தியில் ஊழியம் செய்தபோது நீக்ரோக்கள் அவரை அந்நியராக அல்ல தம் ஜனமாகவே கருதி அவர் பிரசங்கத்தை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். அதனால் பலர் இயேசுவிடம் வழி நடத்தப் பட்டார்கள். பலர் அவரைக்கனம் பண்ணினார்கள்.

அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. எபி.2:17.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE