தமிழ் வேதாகமம் உருவான கதை

தமிழ்ல் பைபிள் உருவானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் ஆகும். இதனை மொழிபெயர்த்தவர் சீகன்பால்கு என்ற அறிஞர். ஜெர்மனியைக் சேர்ந்த இவர் கி.பி 1705-ல் இவர் வந்தார். இங்கேயே தங்கியிருந்து தமிழ் கற்றுக் கொண்டார். பைபிளை 1708-ல் மொழி பெயர்க்கத் துவங்கி 1711-ல் முடித்தார். வாடிகனில் உள்ள நூலகத்தில் இந்த புத்தகங்கள் உள்ளன. முதலில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெற்றிகரமாக முடித்த இவர் பழைய ஏற்பாட்டை மொழி பெயர்க்க ஆரம்பித்தார். ஆனால் அவர் காலமாகி விடவே அவரது நண்பரான பெஞ்சமின் ஸ்கல்ஸ் என்பவர் எழுதி முடித்தார். 1724ல் இந்த புத்தகம் வெளியாயிற்று. இதுவரை விற்ற புத்தகங்களில் பைபிள் தான் அதிகமாக விற்று உலக சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்ல. உலகத்தில் ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 1700 மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டது. ஒரு புத்தகத்தின் தரம் அதன் கையெமுத்து பிரதிகளைக்கொண்டே முடிவுசெய்யப்படுமாம். இலியட் என்ற நூலுக்கு 643 கையெழுத்து பிரதிகள் இருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. நம்முடைய வேதத்தை கணக்கிட்டால் மயக்கமே வந்துவிடும். 24 ஆயிரம் கையெழுத்து பிரதிகள் இருக்கிறதாம். 643க்கும் 24 ஆயிரத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா?

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE