ஆவேசமான குரல்.

ஒருமுறை ஒரு பிரசாங்கியார் அவருடைய சபையில், பொறுமையைக் குறித்து வல்லமையான ஒரு செய்தியை வழங்கினார். செய்தி அநேகருடைய இருதயங்களைத் தொட்டது. ஆலயத்திற்குப் புதிதாக வந்திருந்த இரண்டு வாலிப சகோதரர்கள், போதகரின் செய்தியால் மிகவும் கவரப்பட்டு சபை ஆராதனை முடிந்தவுடன், போதகரை அவரது வீட்டில் சந்தித்து ஜெபித்துவிட்டு வரலாம் என்று சென்றனர். அவர்கள் போதகருடைய வீட்டு வாசலுக்கு வந்தபோதே, வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு உணவுத்தட்டு வேகமாய்ப் பறந்து வந்து வெளியில் விழுந்தது.உள்ளே இருந்து போதகரின் ஆவேசமான குரல் வெளியில் கேட்டது. அவரது மனைவின் பணிவான குரலும் மெதுவாகக் கேட்டது. உள்ளே நடந்தவற்றைக் கவனித்துக் கேட்ட அந்த இரண்டு வாலிபர்களும், உணவிலே உப்பு இல்லாத காரணத்திற்காக போதகர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை அறிந்ததும் இருவரும் வேகமாக வந்த வழியே மீண்டும் திரும்பி விட்டார்கள். அதன் பிறகு அந்த ஆலயத்திற்கு அவர்கள் திரும்பவும் வரவே இல்லை.

பிரசங்கி 7:9ல் உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே. மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும், என்றும். எபேசியர் 4:26ல் “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவம்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்றும் காண்கிறோம். கோபமுள்ள இடத்தில் பாவமில்லாமல் போகாது. திடீரென்று ஏற்பட்ட கோபத்தால் எத்தனையோ பேர் கொலைக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். தேவனுடைய பிள்ளைகள் கோபப்படுவதற்கு பொறுமையாக இருக்க வேண்டும். பிலாத்துவின் அரண்மனையில் இயேசு காண்பித்த பொறுமையே நமக்கு முன் மாதிரியாகவும் வழி கட்டியாகவும் இருப்பதாக அவருடைய பெயரைத் தரித்திருக்கிற நாம் பேசுவதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் பொறுமையைக் காட்டவும் கவணமாக இருக்க வேண்டும். பொறுமை கடலின் பெரியது என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். பொறுமை கோபத்தைத் தணிக்கும்; பாவத்தைத் தவிர்க்கும் பொறுமை தேவனுடைய நீதியை நடப்பிக்கும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE