கனம் பண்ணுவாயாக

ஜனாதிபதி லிங்கன் தமது விருந்தோம்பும் குணத்தாலும், பிறரைக்கனம் பண்ணும் சுபாவத்தாலும் உலகமெங்கும் மிகவும் அறியப்பட்டவர். ஒருபோதும் அவர் தம்மை மற்றவர்களிலிருந்து வேறுபட்டவராக காண்பித்ததேயில்லை. மற்றவர்களை வேறுபாடாக எண்ணினதுமில்லை. ஒரு முறை அவர் அலுவலர்
ஒருவரோடு உலாவிக் கொண்டிருந்தபோது தம்மை மிகுந்த மரியாதையோடு வாழ்த்தின ஒரு கருப்பின பிச்சைக்காரனை அவர் கண்டார். அவர் அவனிடம் திரும்பி தம்முடை தொப்பியை கழற்றி அவனுக்கு மரியாதை செலுத்தினார். அருகில் இருந்த அந்த அலுவலர் மிகுந்த ஆச்சரியத்தோடு லிங்கன் அவர்களிடம் “ஆடை கூட இல்லாத அந்தப் பிச்சைக்காரனுக்கு உங்களுடைய தொப்பியை கழற்றி ஏன் மரியாதை செலுத்தினீர்கள்” என்று கேட்டார். அதற்கு ஜனாதிபதி லிங்கன் புன்னகைத்தவாறே அவரிடம் “மற்றவர்களை மதித்து கனம் பண்ணுகிறதில் என்னைவிட அதிகமாக யாரும் இருப்பதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை” என்று பதில் உரைத்தாராம்.

நாமும் கூட மற்றவர்களை மதித்து கனம் பண்ணுகிறதற்கு முந்திக் கொள்வோராக மாற வேண்டும். எபே 6:3ல் “உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக…” என்று வாசிக்கிறோம். மேலும் லேவி 19:32ல், “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தை கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக, நான் கர்த்தர்” என்றும் வாசிக்கிறோம். ஆகவே பிறரைக் கனம் பண்ணும்போது நாம் தேவனுக்கு பயப்படுகிறோம். நாம் வாழும் சமுதாயம் பிறரை மதிக்காத, தெய்வ பயமற்ற சமுதாயம். இதிலே நாம் வித்தியாசமானவர்களாக வாழ்வதே தேவனுடைய கற்பனையை நிறைவேற்றுவதாகும். பெற்றோரையும், பெரியோரையும், சக வேலைக்காரரையும் மதித்து, கனப்படுத்தி வாழ்பவர்கள் என்ற பெயர் நமக்கு கிடைக்க நல்லதொரு தீர்மானம் இன்றே செய்வோமாக. அதன்படி நாம் செயல்பட்டால் பிறரும் நம்மை மதிப்பதோடு, நமக்கு ஜீவன் தந்த தேவனுடய நாமமும் மகிமைப்படும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE