இல்லாதவைகளை நினைத்து ஏங்காதே

மெக்ஸிகோ நாட்டில் ஒரு சிறப்பான அம்சம் உண்டு. அதென்னவெனில் வெப்பமான நீர்வரும் நீரூற்றுகளும், குளிர்ந்த நீர் வரும் நீரூற்றுகளும் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன.

இது அம்மக்களுக்கு இயற்கையாக அமைந்த ஒன்று. எனவே துணிகளை சலவைச் செய்ய வேண்டுமெனில் இரு வகையான நீரையும் பயன்படுத்தி துரிதமாக, அருமையாக சலவைச் செய்து கொள்ளலாம். இதைக் கண்ணுற்ற ஒரு உல்லாசப்பயணி என்னே அற்புதமான படைப்பு. “இறைவன் இயற்கையாக இந்த நீரூற்றுகளை பக்கத்திலேயே அமைத்துக் கொடுத்திருக்கிறாரே, தேவனுக்கு நன்றி சொல்லவேண்டும்” என்று கூறினார். அதற்கு அவர் கூடவந்த வழிகாட்டி “அட, போங்க இந்த ஜனங்கள் என்னத் தெரியுமா சொல்லுகிறார்கள், சுடு நீர் உண்டு, குளிர்ந்த நீர் இருக்கிறது, சோப்பு நீர் ஊற்று இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள்” என்று கூறினார்.

தேவன் நமக்கும் எண்ணிறைந்த நன்மைகளைச் செய்து வருகிறார். உடை, உடைமை, ஆகாரம், வீடு என்று எவ்வளவோ ஆசீர்வாதங்கள், கிருபைகள். ஆனால் இவையாவையும் அனுபவித்தாலும் திருப்தி இல்லாமலிருக்கிறவர்கள் ஏராளம். அப்போஸ்தலனாகிய பவுல் “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்று ஆலோசனை கூறுகிறார். கொஞ்சம் இருந்தாலும் அதில் திருப்தி அடைகிற விசுவாச மக்கள் பெரிய மனதுடைய மக்களாவர். உலகில் அநேகர் நிறைவான செல்வம் உடையவர்களாக இருந்தாலும் இருக்கிற செல்வத்தில் திருப்தி அடையாதபடியால் அநேக மன உளைச்சல்களும் வேதனைகளும் உடையவர்களாயிருக்கிறார்கள்.

கிறிஸ்தவக் குடும்பத்தில் நல்ல கணவன், புரிந்துக்கொள்ளும் மனைவி, கர்த்தருக்குப் பயப்படும் பிள்ளைகள் ஆக அனைவரும் விசுவாசப்பிள்ளைகளாக
இருந்தால் இதைவிட மேன்மையானது ஒன்றுமில்லை. இது தேவனுடைய பெரிய ஈவு, இதுதான் உண்மையான ஆசீர்வாதம், வேதனையில்லா செல்வம், இனி நமக்கு இல்லாதவைகளை நினைத்து ஏங்காமால், இறைவன் தந்திருக்கும் ஆசீர்வாதங்களை நினைத்து நன்றியோடு அனேகருக்கு ஆசீர்வாதமாக வாழ்வோமாக.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE