உன் Hall Ticket எங்கே?

அது அப்பள்ளியின் பரபரப்பான காலை நேரம். மணி 9.50 தேர்வு துவங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டனர். அப்போது மூச்சிரைக்க ஓடி வந்தான் ஒரு மாணவன். முகமெங்கும் பதட்டம் பரவியிருந்தது. தேர்வெழுதும்படி தனக்குக் குறிக்கப்பட்டிருந்த அறையின் கண்காணிப்பாளரிடம், “ஸாரி ஸாரி, கொஞ்சம் லேட்டாய்டுச்சு. “”என்றவாறு தேர்வறைக்குள் நுழைய முற்பட்டான். “ஒரு நிமிஷம் இரு தம்பி” என்ற கண்காணிப்பாளர் அவனிடம் கேட்டார், “உன் Hall Ticket எங்கே?” இதை சற்றும் எதிர்பாராத அம்மாணவன் பதட்டத்துடன் சட்டை மற்றும் பேண்ட் பாக்கேட்டுகளில் தேடிப் பார்த்து விட்டு, “வர்ற வழில எங்கோ மிஸ் ஆய்டுச்சு ஸார். எல்லாப் பரீட்சைக்கும் கொண்டு வந்தேன். இன்னிக்குக் கடைசி எக்ஸாம் தான் சார். ப்ளீஸ், எப்படியாவது உள்ளே விட்டுடுங்க ஸார். Time வேற ஆய்டுச்சு” இல்ல தம்பி Hall Ticket இல்லாம உன்னை உள்ளே அனுமதிக்க முடியாது, சற்றுக் கடுமையாகக் கூறினார் அவர். ஸார் இந்தப் பரீட்சைக்கு நான் fees கட்டியிருக்கேன், இரவு பகலா கண் விழிச்சுப் படிச்சிருக்கேன் ஸார். இந்த Time எழுதலைனா ஒரு வருஷம் வீணாப் போயிடும். பெரிய மனசு பண்ணி என்னை உள்ளே விடுங்க ஸார் கண்களில் நீருடன் கெஞ்சினான், அம்மாணவன்.

“தம்பி, நீ இந்தத் தேர்வுக்காக fees கட்டியிருக்காலாம், கண் விழிச்சுப் படிச்சிருக்கலாம், என்ன செய்திருந்தாலும் நுழைவுச் சீட்டு (Hall Ticket) இல்லாமல் இப்பொழுது நீ தேர்வு எழுத முடியாது. நான் பெரிய மனது பண்ணி உன்னை உள்ளேவிட்டால், நான் வீட்டுக்கு போயிட வேண்டியது தான். கண்டிப்பாக உன்னை அனுமதிக்க முடியாது”, என்று மறுத்து அம்மாணவனை பள்ளி வளாகத்திலிருந்து வெளியே அனுப்பிவிட முதன்மைக்கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார். மாணவனை விசாரித்த முதன்மைக்கண்காணிப்பாளர் அவனை வெளியே அனுப்பிவிட்டார்.

நாமும் கூட தவறாமல் ஆலயத்துச் சென்றிருக்கலாம். தசம பாகம் கொடுத்திருக்காலம். ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேதம் வாசித்திருக்கலாம். அறையைப் பூட்டிக்கொண்டு அனுதினமும் ஜெபித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நம்மைப் பரலோக ராஜ்ஜியத்துக்கு நிச்சயம் கொண்டு செல்லாது. அங்கு நாம் நுழைய வேண்டுமென்றால் அதற்குரிய Hall Ticket வேண்டும். அது என்ன Hall Ticket என்கிறீர்களா? பரிசுத்தம் தான் அந்த Hall Ticket. ஆம், நாம் என்ன தான் செய்தாலும் அவர் எதிர்பார்க்கிற பரிசுத்தம் நம் வாழ்வில் இல்லையேல் அவர் நமக்குத் தரும் பதில் “நான் உங்களை அறியேன்” என்பதே. எனவே பரிசுத்தம் என்கிற அந்த Hall Ticketஐ இழந்து விட்டாமல் பத்திரமாகக் காத்துக் கொண்டால் மட்டுமே நம்மால் பரலோக ராஜ்ஜியத்துக்குள் நுழைய முடியும்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE