கெர்ச்சிக்கிற சிங்கம்

காட்டில் தேர்தல் நடந்தது. சிங்கம் போட்டியின்றி ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்ற மிருகங்கள் எதிர்த்து நிற்க பயந்ததால் ஒருமன தேர்வாக முடிந்தது. சிங்கத்திற்கு ஒரே குஷி. மிடுக்காக காட்டில் வலம் வர  ஆரம்பித்தது. எதிரே மான் வந்தது. சிங்கத்தைப் பார்த்தும் ராஜாவே வாழ்க என்று கும்பிட்டது. நரி சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கியது. இப்படியாக எல்லா மிருகங்களும் வணங்கியது.
      யானை அந்த பக்கமாய் வந்தது. யானையும் தன்னை வணங்கும் என்று சிங்கம் எதிர்பார்த்தது. ஆனால்  யானை சிங்கத்தை கண்டு கொள்ளவே இல்லை.சிங்கத்திற்கு கோபம் வந்தது. பிடரிமயிர் சிலிர்த்தது. டேய் தடியா… இந்த காட்டுக்கு ராஜா நான். என்னை வணங்கு என்று சிங்கம் கெர்சித்தது. யானை துதிக்கையை நீட்டி சிங்கத்தைப் பிடித்து வாரி சுருட்டி எடுத்து துணி துவைப்பது போல் துவைத்து எடுத்து விட்டது. அவமானம் தாங்காமல் அந்த காட்டைவிட்டே சிங்கம் ஓடிப்போனது.
     உலகத்திற்கு அதிபதியான சாத்தான், தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளான உங்களை விழுங்கும் படியாய் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் வருவான். உங்களுக்குள் இருப்பவரோ பெரியவர், யானையின் பெலனைக் காட்டிலும் வல்லமையும் பராக்கிரமும் உடையவர். அவனுக்கு எதிர்த்து நின்றாலே போதும், அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்.
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். I பேதுரு 5:8
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE