காலத்தைப் பிரயோஜனப்படுத்துங்கள்

முன்னொரு காலத்தில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வாழ்நாளில் பணத்தைச் சேர்ப்பதிலேயே கவனமாயிருந்தான். சேர்த்தப் பணத்தைச் செலவு செய்யவும் விரும்பவில்லை. அவன் தான் சேகரித்த 500 ஆயிரம் தினார்களை எப்படி பாதுகாப்பாய் வைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள், மரண தூதன் அவனக்கு முன்பாகத் தோன்றி அவனது உயிரை எடுக்க வந்திருப்பதாகக் கூறினான். அந்தக் கருமி, தூதனிடம் இன்னும் கொஞ்சம் காலம் கூட்டிக் கொடுக்கும்படி மிகவும் கெஞ்சினான். தூதனோ கண்டிப்பாக மறுத்துவிட்டான். அதன்பின் அவன் தூதனிடம் மூன்று நாள் தவணைத் தரும்படி கெஞ்சினான், அதற்கும் தூதன் மறுத்துவிட்டான். பின் அவன் ஒரே ஒரு நாள் தவனைக்காக கெஞ்சினான். அதுவும் அவனுக்கு மறுக்கப்பட்டது. இறுதியாக “சில நொடிகள் மட்டும் கொடுங்கள் நான் குறிப்பு ஒன்றை எழுதி வைக்க விரும்புகிறேன்” என்றான். மரண தூதன் அனுமதித்ததும் அவன் கீழ்வருமாறு எழுதினான், “இந்தக் குறிப்பை வாசிக்கிறவர்களுக்கு நான் கூற விரும்புவது இந்த உலகத்தில் வாழும்போதே நன்றாக வாழுங்கள் எதிர் காலத்தில் நன்றாக வாழலாம் என்று நிகழ்காலத்தை இழந்துவிடாதீர்கள். என்னுடைய ஐநூறு தினார்களைக் கொண்டு என்னால் ஒரு நொடிப் பொழுதைக் கூட வாங்க முடியவில்லை.. என்று எழுதினான்.

இது ஒருவேளை ஒரு பழங்காலக் கட்டுக் கதையாக இருக்கலாம். ஆயினும் மரணம் நமக்கு எப்போது வருகிறது என்றோ, நம் வாழ்வு எப்போதும் முடியும் என்றோ நாம் அறியாமல் இருக்கிறபடியால் இந்த நாட்களைப் பிரயோஜனப்படுத்தி, நம்மிடம் இருப்பாதைக் கொண்டு பிறருக்கு ஆசீர்வாதமாக வாழ்வது அவசியம். கஞ்சத்தனத்தினால் வாழ்க்கையின் இன்பத்தை இழப்பது ஞானம் அல்ல. எத்தனை கோடி ரூபாய் பணம் நம்மிடம் இருந்தாலும் ஒரு நொடிப்பொழுதைக்கூட நம்மால் வாங்க இயலாது. ஆகவே சாலமோன் ஞானி சொல்வதுபோல இந்த உலகில் தேவனுக்கு பயந்து, அவர் தரும் ஆசீர்வாதங்களைக் கொண்டு இன்பமாக வாழப் பழுகுவது நல்லது. அந்த வாழ்க்கையே பிறருக்கு ஆசீர்வாதமாக அமையும்.

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜப்படுத்தி கொள்ளுங்கள்”. எபே 5:16.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE