பரலோகத்திற்குப் போக என்ன வழி ?

4 பேர் ஒரு குருவினிடத்தில் போய் பரலோகத்திற்குப் போக என்ன செய்யவேண்டும்? எனக் கேட்டனர். “30 நாட்கள் கழித்து வாருங்கள் உங்களுக்கு வழி சொல்கிறேன். ஆனால் உங்களில் ஒருவர் அதற்குள் மரித்துவிடுவீர்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
         நாட்கள் கடந்தது, சரியாக 31 நாளில் 4 பேரும் வந்து சேர்ந்தனர். ஒருவருக்கொருவர் ஆச்சரியமும், சந்தோஷமும் அடைந்தனர். “”நல்லவேளை 4 பேரும் உயிரோடு பிழைத்துக்கொண்டோம் பரலோகம் செல்ல வழியறியும்முன்னே சாவு நேரிடவில்லை. குருவிடம் போவோம். குரு ஆச்சரியப்படுவார். அப்போது, அவரிடம் 4 பேரும் உயிரோடு
இருக்கிறோம் ஒருவரும் சாகவில்லை நீங்கள் பொய்யான போலி ஆசாமி என்று கூறுவோம்” எனப்போனார்கள்.
           குரு சிரித்தமுகமாய் 4 பேரையும் பார்த்துப் பரலோகம் போக வழி இதுதான். 30 நாட்களும் பயந்து பயந்து “இன்றைக்கு நான் செத்துட்டா’ என்று 4 பேருக்கு நன்மை செய்து பொய், பித்தலாட்டம் அகற்றி, பிறர் மனம் புண்படாமல் நடந்து 4 பேருக்கு உதவிசெய்தே வாழ்ந்தீர்கள் அல்லவா இதுதான் சொர்க்கம் போற வழி. நாலுநாள் வாழ்ந்தாலும் நாலு பேருக்குப் பிரியோஜனமா வாழுவதுதான் வழி என்று சொல்லிக் கொண்டே தட்டிக் கொடுத்த குருவைப்பார்த்து 4 பேரும் கோபத்தை விடுத்து கும்பிட்டு நின்றார்கள். நீங்கள் போலி என்று சொல்ல வந்தோம் ஆனால் எங்கள் வாழ்வில் ஜோதி ஒன்றை பிரகாசிக்கச் செய்து விட்டீர்கள் என்று மண்டியிட்டனர்
       4நாள் வாழ்ந்தாலும் “”நச்” ன்னு வாழ்வோம். 4 நாள் தான் இருந்தாலும் 4 பேருக்கு பிரயோஜனமாய் இருப்போம். 30 நாட்கள் அல்ல; வாழ்நாளெல்லாம் பரிசுத்தமாய் வாழ பரிசுத்தரை அண்டி வாழ்வோம். பரலோகத்தை கொண்டு வந்துகொடுப்போம் இந்த உலகில்
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE