பஸ்ஸில் பயணம் செய்யும்பொழுது..

வாழ்க்கை ஒரு பயணம் என்றார் ஒரு தேவ மனிதர். இந்த வாழ்க்கை பயணத்திலே வாகனப் பயண நேரங்களும் அதிகமுண்டு அல்லவா? போக்குவரத்து சாதனங்கள் பெருகிப்போன காலத்திலே போக்குவரத்து அவசியங்களும் மனிதனுக்கு பெருகிப் போய்விட்டது. நமது வாழ்க்கையிலும் பஸ், ரயில், நடை பயணங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறோம்.நம்முடைய பயண நேரங்களிலும் நம் கிறிஸ்தவ நற்சாட்சியை விளங்கப் பண்ண இதோ சில ஆலோசனைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.
    * பஸ்ஸில் பயணம் செய்யும்பொழுது டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கலாம்.
    * நண்பர்கள், பழகியவர்கள் சேர்ந்து பயணம் செய்யும் பொழுது ஆவிக்குரிய காரியங்களைப் பேசலாம். கேட்கும் மற்றவர்களுக்கும் இது பயன் தரும்.
    * சில பஸ்களில் வீடியோ சினிமா காட்சிகள் உண்டு. இப்படிப்பட்ட பயண சூழ்நிலைகளை தவிர்க்கலாம்.
    * சிறிய அட்டைகளில் வசனங்களை எழுதி வைத்து பஸ்ஸில் பயணம் செய்யும்போது அதை மனப்பாடம் செய்யலாம்.
    * உங்கள் பஸ் கடந்து போய்க் கொண்டிருக்கும் கிராமத்திற்காகவோ, பட்டணத்திற்காகவோ ஜெபிக்கலாம்.
    * கையில் கைப்பிரதிகளை வைத்துக் கொண்டு முடிந்த வரை விநியோகிக்கலாம்.
    * வியாதிஸ்தர், பெலவீனமுடையோர், வயோதிபர், இவர்களுக்கு நாம் எழுந்திருந்து இடம் கொடுக்கலாம்.
    * சரியான சில்லறை கொடுத்தல், பயணவிதிகளை கடைபிடித்தல், ஏறும்போதும் இறங்கும்போதும் நிதானத்தைக் கடை பிடித்தல் இவையெல்லாம் நம்மால் செய்ய முடிந்த நல்ல காரியங்கள். செய்து பார்க்கலாமே!
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE