உண்மையை பேசுங்கள்..

ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் ஜனாதிபதி. அவர் ஆறு வயது சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது. விளையாடும் வயதிலே அவருக்கு ஒரு சிறு கத்தி வெகுமதியாகக் கிடைத்தது. அவருக்கு ஒரே மகிழ்ச்சி. கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் வெட்டி மகிழ்ந்தார். ஒரு நாள் தோட்டத்திலே போய் செடிகளையும் கொப்புகளையும் வெட்டி விளையாடிக் கொண்டிருந்த போது செர்ரி மரக்கன்று ஒன்றையும் கத்தியினால் வெட்டி நாசம் செய்து விட்டார். அடுத்த நாள் காலை தகப்பனார், தோட்டத்திலே உள்ள அந்த செர்ரி கன்றை வெட்டிப் போட்டது யார்?” என்று கேட்டார். கத்தியோடு விளையாடிக்கொண்டு வந்த சிறுவன், தகப்பன் கேட்டதும், அப்பா என்னால் பொய் சொல்ல முடியாது. அது உங்களுக்குத் தெரியும், நான் பொய் சொல்ல மாட்டேன். கத்தியைக் கொண்டு நான் தான் வெட்டினேன்” என்றான். அப்போது அவன் அப்பா அவனை அனைத்து, ‘அருமை மகனே உன் உண்மைப் பேச்சு ஆயிரம் மரங்களைவிட அதிக விலையேறப்பெற்றது செர்ரி மரம் போனால் போகட்டும்” என்று கூறி மகனை முத்தமிட்டாராம்.
உண்மை பேசுவதில் உறுதியாய் நிற்கும்போது சில எதிர்மறை விளைவை சந்திக்க நேரிட்டாலும் தங்கள் உறுதிக்கும், உண்மைக்கும் கட்டாயம் வெகுமதி உண்டு. கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நம்மை கொண்டு செல்லும் என்ற வெகுமதிதான் அது.
நண்பர்களே! உண்மைபேச விரும்புவோம், பிரயாசப்படுவோம், உறுதி கொள்வோம். கர்த்தருடைய பரிசுத்த பர்வத்தில் வாசம் பண்ணும் பாக்கியம் பெறுவோம்! உண்மையை பேசுங்கள்..

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE