திராட்சைத் தோட்டம்.

கல்லூரி ஒன்றினை சுற்றிலும் அநேக திராட்சைத் தோட்டங்கள், திராட்சைச் செடிகள் பச்சைப்பசேலென்று செழிப்பாகக் காணப்பட்டன. நடந்து செல்பவர்களுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியையும், மனதிற்கு ரம்மியத்தையும் கொடுத்தது.. கல்லூரி மாணவர் பலரும் அவ்வழியே நடப்பது வழக்கம். புதிதாய் ஒரு மாணவன் வந்து சேர்ந்தான். ஒரு நாள் அவ்வழியே வழக்கம் போல நடந்து சென்ற பொழுது இலைகள் ஒன்றுகூட இல்லாமல் வெட்டப்பட்டு காய்ந்த குச்சிகள் போன்று திராட்சைத் தோட்டம் காட்சியளித்தது. இது என்னவென்று தெரியாத புதிய மாணவன் “எவ்வளவு புத்தியீனமாக ஒரே நாளில் இலைகளை வெட்டி விட்டார்கள். இவ்வழியே நடக்க பிரியமாயில்லை”என்றானாம், கூடச்சென்றவர்களோ அவனுக்கு காரியத்தை விளக்கிக் கூறினார்கள், அவ்விதம் இலைகளை வெட்டி சுத்தம் செய்தால்தன் திராட்சை கொடிகள் அதிகமான கனிகளைக் கொடுக்கும். திராட்சைச் செடிகள் அழகிற்காக வளர்க்கப்படுவதில்லை. அதிகக் கனிகளைக் கொடுக்க வேண்டுமென்பதே தோட்டக்காரர்களின் நோக்கம்” என்று விளக்கம் கூறினார்கள்.

நண்பர்களே! நாமும் இவ்வுலகில் அலங்கார பொம்மைகள் போல் இருக்க வேன்டும் என்பது தோட்டக்காராகிய பிதாவின் நோக்கமல்ல. ஆவிக்குரிய கனிகள் அதிகம் கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய பிரதான நோக்கம். கர்த்தர் நம்மைத் தெரிந்து கொண்டதின் நோக்கமே நாம் கனி கொடுக்க வேண்டும் என்பது தான். எனவே அதற்குத் தடையாக காணப்படும் பாவ காரியங்களைச் சுத்தம் செய்கிறார். அது நமக்குக் கஷ்டமாகத் தோற்றமளித்தாலும் ஆண்டவரின்
நோக்கம் எப்போதும் நல்லது தான். தோட்டக்காரர் சுத்தம் பண்ணுவது அதிக கனி கிடைக்கும்படி தானே. கனி கொடுப்போம்! அவரில் நிலைத்திருபோம்!! மிகுதியான கனி கொடுத்து பிதாவை சந்தோஷப்படுத்துவோம்!!!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE