கிறிஸ்துவில் வளர 7 வழிகள்

பெற்றெடுக்கும் பிள்ளையிலிருந்து, புதிதாய் நடும் ரோஜா செடி வரை அனைத்திலும் வளர்ச்சியை எதிர்பார்ப்பது மனிதனுடைய நியாயமான ஆசை! அதுபோல கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு புது விசுவாசியும் கிறிஸ்தவ வாழ்வில் வளர வேண்டுமென்பது தேவனுடைய விருப்பம். இப்படி கிறிஸ்துவில் வளருவதற்கான வழிகளை ஒரு பக்தன் பின்வருமாறு விளக்குகிறார்.

1. விட வேண்டிய கெட்டவழிகளை அதிக பிரயாசத்தோடும், தேவ ஒத்தாசையோடும் விட்டுவிட வேண்டும். இதற்காக உபவாசமிருக்கவும் தயங்கக்கூடாது.

2.உங்களுடைய வழிகள் கர்த்தருடைய வழிகள்தானா என்பதை ஆராய்ந்து பாருங்கள். கர்த்தருடைய வழியில் உத்தமமாய் நடக்க உள்ளத்தின் ஆழத்தில் திட்டமான தீர்மானமெடுங்கள்.

3. ஜெபக்கூட்டங்கள் மற்றும் ஆராதனைகளில் அதிகமாய் கலந்துகொள்ள பிரயாசமெடுங்கள்.

4. அந்தரங்கத்தில் ஜெபிக்கும் தனி ஜெப வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதிகாலை வேளையே தியானத்திற்கும் ஜெபத்திற்கும் ஏற்றது.

5. தேவ சமூகத்தில் உங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுங்கள். நானல்ல கிறிஸ்துவாகிய நீரே என்னில் பெருக வேண்டுமென்று மன்றாடுங்கள்.

6. கிறிஸ்துவின் சாயல் உங்களில் வளரட்டும். கிறிஸ்துவின் சுபாவங்கள் உங்களில் பெருகட்டும். அவரது குணாதிசயங்கள் உங்களது வாழ்வில் காணப்படட்டும்.

7. உங்களுக்கென்று ஒரு ஊழியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். ஜெப ஊழியமோ, கைப்பிரதி கொடுப்பதோ, வியாதியஸ்தரை சந்திப்பதோ, சிறைச்சாலை ஊழியமோ எதுவானாலும் உற்சாகமாய் கர்த்தருக்கென்று செய்யுங்கள்.

பிரியமானவர்களே! மேற்கண்ட எளிய ஆனால் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய இந்த காரியங்களை பின்பற்றுவோமானால் நாம் கிறிஸ்துவுக்குள் வளர்வது உறுதி. வளர்வதோடு மாத்திரமல்ல கனி கொடுக்கவும் முடியும். ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் வருடக்கணக்கில் பெயர் கிறிஸ்தவராய் வாழ்ந்து விட்டீர்களோ? இனியும் தாமதிக்க வேண்டாம். இன்றே மனம் திரும்புங்கள். வளர வேண்டிய வழியை அறிந்துகொண்ட பின்பும் மனம் கடினமாயிருக்க வேண்டாம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE