நீ செல்லும் பாதை எப்படிபட்டது

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு வாழ்க்கையை மையமாக வைத்து இந்த பூமியில் வாழ்வதுண்டு

வாலிபர்கள் என்றாலே இப்படி தான் இருப்பார்கள் என்று எல்லோரும் நினைக்கும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை ஒரு குருப்பிட்ட வட்டத்துக்குள் தான் இருக்கும்

இதை வாசிக்கின்ற தேவ ஜனமே கட்டாயம் உங்களுக்கென்று ஒரு போதனையை வைத்துக்கொண்டு ஒரு குறுப்பிட்ட பாதையில் நடந்து கொண்டு இருக்கின்றீர்கள்

சிலருக்கு சபையில் போதகர் என்ன சொல்லுவாரோ அதை அப்படியே பின்பற்றுவதுண்டு , சிலர் சில சினிமா படங்களை பார்த்து அதற்க்கேற்ற படி தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதுண்டு

எதுவானாலும் சரி அந்த வாழ்க்கையில் தேவ சித்தம் வேண்டும் , அப்போது தான் அதன் முடிவு நன்றாக ஆசிர்வாதமாக இருக்கும்

இன்று சிலர் நான் எவ்வளவோ ஜெபிக்கின்றேனே , எவ்வளவோ வேதம் வாசிக்கின்றேனே , எவ்வளவோ காணிக்கை கொடுக்கிறேன் , ஆனாலும் ஏன் இந்த வாழ்க்கை இவ்வளவு கஷ்டமாக இருக்கின்றது என் நினைக்களாம்

ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் உங்களது வாழ்க்கையில் தேவ சித்ததின் படி வாழ்க்கை சென்று கொண்டிருந்தால் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அது உங்களை மூழ்கடிக்காது , தேவ சித்தமே இல்லாமல் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை சரியாக அமையாது , முடிவு வேதனையை தான் கொண்டு வரும்

சிறிய உதாரணம் சொல்லுகிறேன் , வாலிப வயதில் தேவ சித்தம் இல்லாமல் ஒரு குடிகாரனை காதல் செய்து சில பெண்கள் வீட்டில் சன்டை போடுவார்கள் நான் திருமணம் முடிந்த பிறகு எப்படியாவது இவனை மாற்றிவிடுவேன் என்று

திருமணம் முடிந்த கொஞ்ச நாள் கடவுள் ஆசிர்வதித்தது போல் நன்றாக தான் இருக்கும் , ஆனால் கொஞ்ச நாள் கழித்து இயேசுவே என் கணவர் குடித்து விட்டு என்னை அடிக்கிறார் என்று ஜெபித்து கொண்டிருக்கிறார்கள்

சில இரட்சிக்கபட்ட வாலிபர்கள் கூட இப்படி தான் பெண் அழகாய் இருக்கிறாள் என்று புத்தியில்லாத ஸ்திரீயை காதலித்து திருமணம் முடிந்த பிறகு பெற்றோரே விட்டு தனி குடித்தனம் போக வேண்டும் என சண்டை போடும் போது தான் , பன்றியின் மூக்கில் உள்ள மூக்குத்தியை பார்த்து காதல் செய்துவிட்டோமே என்று உணர்கின்றனர்

வாலிபர்களுக்கு வருகின்ற பெரிய பிரச்சனை இது தான் வாலிப நாட்களில் அதனால் தான் இதை உதாரணமாக சொன்னேன் , இன்னும் அனேக காரியம் உள்ளது

இயேசு நமக்கு அறிவு கொடுத்து இருக்கிறார் அதன் படி ஜெபித்து தான் ஒவ்வொரு காரியத்திலும் தேவ சித்ததோடு வாழ்ந்தால் அதன் முடிவு ஆசிர்வாதமாக இருக்கும்

இயேசு Gentle God என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் , நீ தவறு செய்யும் போது உன் இதயத்தில் உணர்த்துவார் ஆனால் அவர் இறங்கி வந்து உன்னிடம் இது தவறு என்று சண்டை போட்டு கொண்டு இருக்கமாட்டார்

இதை வாசிக்கின்ற தேவ ஜனமே பவுல் வேதத்தில் சொல்கின்றாரே

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 2 தீமோத்தேயு 4 :7

இப்படி உன் வாழ்க்கையில் மரிக்கும் போது தேவ சித்ததின் படி வாழ்ந்து சொன்னால் முடிவு நித்திய மோட்ச வாழ்க்கை அல்லது (illaiyendraal) நரகம் தான் மிஞ்சும்.

உன் வாழ்க்கையில் நீ செய்கிற ஒவ்வொரு காரியமும் தேவ சித்ததை அறிந்து ஜெபிக்கணும் , அதன்படி நடக்கணும் இல்லை என்றால் முடிவு பரிதாபமாக இருக்கும்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE