யார் அந்த சுந்தர்…?

பஞ்சாப் மாநிலத்தில். ‘சுந்தர்’ என்ற சீக்கீய மதத்தைச் சார்ந்த ஒரு வாலிபன். இறைவனைத் தாகத்தோடு தேடினான். “என்னை உண்டாக்கின தெய்வத்தை நான் பார்க்க வேண்டும். அல்லது நான் சாக வேண்டும்”  என்று பிரார்த்தனை செய்தான்.
    ஒருநாள் அதிகாலையில் எழுந்து ஆயத்தமாகி. “தெய்வம் என்று ஒருவர் இருந்தால், நான் அவரைக் காண வேண்டும். அல்லது இன்று காலை இரயிலில் விழுந்து சாகப் போகிறேன்” என்று, கடைசியாக தன் அறையில் வேண்டுதல் செய்தான்,
  திடீரென்று அந்த அறையில் ஒரு வெளிச்சம் பிரகாசித்தது. இயேசு கிறிஸ்து அவனுக்குத் தரிசனமானார். அவன் இயேசு கிறிஸ்துவையும். பரிசுத்த வேதாகமத்தையும் வெறுத்தபடியினால். இயேசு கிறிஸ்துவை அவன் எதிர்பார்க்கவேயில்லை.  “நான் தான் உன்னையும், இந்த உலகத்தையும் உண்டாக்கின தேவன், உன் முழு இருதயத்தோடும் நீ என்னைத் தேடினபடியினால். என்னை உனக்கு வெளிப்படுத்தினேன்” என்று இயேசு கிறிஸ்து அவனோடு பேசினார். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அந்த வாலிபன்தான். சாது சுந்தர் சிங்! தினமும் முழங்காலில் நின்று, இயேசு கிறிஸ்துவின் முகத்தைத் தேடுவார். இயேசு கிறிஸ்துவைத் தரிசிப்பார்.
       ஒரு சமயம் அவர் அமெரிக்கா தேசத்திற்குச் சென்றிருந்த போது, ஒரு வீட்டின் வாசல்படியில் நின்று, கதவைத் தட்டினார். ஒரு சிறு பெண் வந்து, கதவைத் திறந்து அவரைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் ஓடிப்போய், “அம்மா, இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார்” என்று தன் தாயிடம் சொன்னாள். காரணம், சாது சுந்தர்சிங் அவர்கள், தினமும் இயேசு கிறிஸ்துவைத் தரிசிக்கிறவரானபடியால், அவருடைய முகமும் பிரகாசித்துக் கொண்டிருந்தது!
     அவரைப் பார்க்கிறவர்கள் அவரில் இயேசு கிறிஸ்துவைக் கண்டார்கள். நாமும் முழு இருதயத்தோடு இயேசு கிறிஸ்துவின் முகத்தைத் தேடுவோம். தேசத்திற்கு ஷேமம் உண்டாகும்!
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE