நீங்கள் வெற்றியாளராக மாற!

ஜார்ஜ் முல்லர், கொஞ்சம் கூட பண வசதி இல்லாத ஒரு நிலையில் அசைக்க முடியாத விசுவாசத்தினால் ஏராளமான கட்டடங்களை அனாதைக் குழந்தைகளுக்கு
கட்டுகிறதையும்,ஏராளமான குழந்தைகளை எந்த நிதி இல்லாமல் போஷிப்பதையும் அறிந்தவர்கள் அநேகர். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஒருவர் இவரைப் பார்த்து கேட்டார்,“எப்படி நீங்கள் வெற்றியுள்ளவராய் இருக்கிறீர்கள்”. அதற்கு ஜார்ஜ் முல்லர், “நான் செத்துப்போன நாள் ஒன்று இருக்கிறது. அந்த நாளில் என்னுடைய சொந்த எண்ணங்கள், சொந்த விருப்பங்கள், சொந்த நோக்கங்கள் எல்லாம் அடக்கம் பண்ணப்பட்டன, அன்று மட்டுமல்ல இன்றும் அதே அடக்கம் ஒவ்வொரு நாளிலும் நடக்கிறது.”என்றார்.

சுயம் மரிப்பது கிறிஸ்துவின் வெற்றியை தொடர்ந்து பெறும்படி செய்யும். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே அறிய விரும்புகிறோம். மற்றவர்களைப் பாராமல் நம்முடைய தாலந்துகளைப் பெருக்கிக் கொள்ள கிறிஸ்துவையே நோக்கிப் பார்த்து, அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். நம்முடைய காரியங்களை குறித்து பெருமைப்பட்டு கொண்டிராமல் கிறிஸ்துவுக்கு நம்மை முழுவதுமாய் ஒப்புவிப்போமானால் நிச்சயமாய் நாம் நம்முடைய தோல்விகளை கண்டு பயப்படாமல் வெற்றியைத் தரும் தேவன் மேலேயே நோக்கமாய் இருப்போம். அனுதினமும் நம்முடைய மாம்சம் சிலுவையில் அறையப்பட வேண்டும். மாம்சத்தையும் அதின் இச்சைகளையும் சிலுவையில் அறையும்போது, நிச்சயமாக நாம் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருப்போம். மாம்சத்தை சிலுவையில் அறையாதவன் வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியாது. உலகம் நம்மை ஏமாற்றிவிடாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்போம்.

நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன். I கொரிந்தியர் 15:31

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE