ஆணியின் தழும்புகள்

ஒரு விசை, மகன் துஷ்ட வழியில் செல்லுவதைப் பார்த்தபோது அவனுடைய தகப்பன்…அவன் எப்பொழுதெல்லாம் தவறு செய்து இருதயத்தை புண்படுத்துகிறானோ அப்பொழுதெல்லாம் ஒரு ஆணியை எடுத்து வீட்டின் முன்னே நின்றுக் கொண்டிருந்த ஒரு சிறிய மரத்தில் அறைவது உண்டு. தகப்பன் தன் மகனிடம், “மகனே இந்த ஆணி மரத்தைக் குத்துகிறது போல உன் தீய செயல் என் உள்ளத்தைக் குத்துகிறது” என்று சொன்னார். சில மாதங்களுக்குள் அந்த மரத்திலே நூற்றுக்கணக்கான ஆணிகள் பதிந்துவிட்டன. ஆனால் ஒரு நாள் அந்த மகன் இரட்சிக்கப்பட்டான். தன் தகப்பனைதுக்கப்படுத்திவேதனைப்படுத்தியதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டான். தகப்பனிடம் போய் “அப்பா எவ்வளவுக்கெவ்வளவு உங்களை வேதனைப்படுத்தினேனோ அவ்வளவு அதிகமாய் உங்களை நேசித்து, அன்பு செலுத்தி உங்களுக்குப் பிரியமாய் நடந்து கொள்வேன்” என்றானாம். அன்று முதல் நற்கிரியைச் செய்ய ஆரம்பித்தான். எப்பொழுதெல்லாம் மகனைக் குறித்து தகப்பனுடைய மனம் மகிழ்ந்ததோ அப்பொழுதெல்லாம் அவர் ஒவ்வொரு ஆணியாக அகற்ற ஆரம்பித்தார். சில மாதங்களுக்குள் மரத்திலிருந்து ஆணிகள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டன. ஆனாலும் அந்த தழும்புகள் அந்த மரத்திலே தெரிந்துகொண்டேயிருந்தன. தன் தகப்பனை துக்கப்படுத்தின தழும்புகள் மாறாததாகவே இருந்தது.

அன்புக்குரியவர்களே!..கிறிஸ்துவின் காயங்களுக்கும் தழும்புகளுக்கும் காரணம் என்ன? காரணமற்ற காயங்களையும், தழும்புகளையும் விரும்பி ஏற்றுக்கொண்டது எதற்காக? நாம் செய்யும் அக்கிரமங்களே ஆணிகளாய் மாறி இயேசுவின் கரங்களைத் துளைக்கிறது. நம் துணிகரமான செயல்கள் தானே அவர் விலாவில் ஈட்டிப்போலப் பாய்கிறது. இன்று சிலுவையை நோக்கிப் பார்க்கும்போதெல்லாம் அவர் காயங்களையும் தழும்புகளையும் நினைக்கும் போதெல்லாம் நம் உள்ளம்
மனந்திரும்பட்டும். ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க இன்னும் தயக்கம் தேவையல்லவே.

“அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. ஏசா 53:5

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE