திருக்குறள் எழுதியது யார் ???

பள்ளி ஆய்வாளர் அந்த பள்ளிக்கூடத்திற்கு திடீரென விசிட் செய்தார். மாணவர்களின் கல்வித் தரத்தை சோதித்தறிவதற்காக மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். திருக்குறளை எழுதியது யார் என்ற முதல் கேள்வியை கேட்டார். ஒரு மாணவன் எழுந்து பாரதியார் என்றான். ஆய்வாளர் வகுப்பாசிரியரை சரமாரியாகத் திட்டினார். திருக்குறள் எழுதியது யார் என்று கற்றுக் கொடுக்கத் தெரியாத நீரெல்லாம் ஒரு ஆசிரியரா என திட்டி தீர்த்தார். வகுப்பாசிரியர் தலையை சொறிந்துக் கொண்டே பாரதிதாசன் என்று எவ்வளவு சொல்லியும் பையங்கள் தலையில் ஏறவே இல்லை. ஐயா என்றார். வகுப்பாசிரியர் லட்சணத்தைக் கண்ட ஆய்வாளர் தலைமை ஆசிரியரைக் கூப்பிட்டு டோஸ்விட்டார். ஐயா திருக்குறளை எழுதினது கம்பர்ன்னு ஆயிரம் தடவை சொல்லியும் இந்த வாத்தியார் சரியா புரிஞ்சுக்கலை – இது தலைமையாசிரியரின் புலம்பல். இதைக்கேட்ட ஆய்வாளருக்கு ஓரே அதிர்ச்சி. திருக்குறளை எழுதினது யார் என்கிற இந்த  சின்ன விஷயம்கூட தெரியாமல் ஏன் பள்ளிக்கூடம் நடத்துகிறீர்கள். இனிமேலாவது தெரிந்துக் கொள்ளுங்கள்.  திருக்குறளை எழுதினது ஓளவையார் என்று ஆய்வாளர் தெளிவாய் பதிலளித்தார்.
    இப்படித்தான் நாமும் ஒருவருக்கொருவர் மிஞ்சின ஞானமுள்ளவர்கள் என நினைக்கிறோம். தெரிந்ததைப் பேச வேண்டும். தெரியாதபோது மௌனமாயிருப்பது நல்லது.  பேசாதிருந்தால் மூடனும் ஞானியெனப்படுவான் என்று வேதம் கற்பிக்கிறது.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE