நீங்க வந்தா மட்டும் போதும்

 ஒரு அன்புள்ள ராஜாவைப் பார்க்க மூன்று பேர் காத்திருந்தார்கள். முதலாவது ஆள், ராஜாவை வணங்கி தனக்கு ஐந்து ஏக்கர் நிலம் வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். அடுத்தவன்,””ஐயா எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம் தேவை என்னுடைய பிள்ளைகளுடைய திருமணத்தை நடத்த விரும்புகிறேன்” என்றான். இரண்டு பேருக்கும் ராஜா சந்தோஷமாய்க் கொடுத்து அனுப்பினார். ஆனால் மூன்றாவது ஆள் ராஜாவை வணங்கி, “”ஐயா எனக்கு பணம், நிலம் வேண்டாம். என் அன்புள்ள ராஜா ஒருநாள் என் வீட்டுக்கு வந்து உணவு அருந்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். ராஜா அவனுடைய ஊருக்கு வந்தார். அன்று முதல் அவனுடைய வீடு மேன்மையடைந்தது. அந்த கிராமத்திற்கு புது ரோடுகள் கிடைத்தன. ராஜா அங்கு வந்தது, வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத அனுபவமானது.
இன்றைக்கு ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தரும் மகிமையின் தேவனுமானவர், உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களில் தங்கியிருக்க விரும்புகிறார். தேவனுடைய பிள்ளைகளே, அவருடைய மகிமையை வாஞ்சித்து கதறுவீர்களாக.
(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE