நீங்க மட்டும் போதும்

ஒரு தகப்பன் அமெரிக்க தேசத்திலே வேலை பார்த்தார். அவருடைய குடும்பமோ தமிழ்நாட்டில் இருந்தது. விடுமுறைக்கென அத்தகப்பனார் தன் வீட்டிற்கு வந்தார். தன் ஒரே மகனுக்கென அநேக பொருட்களை வாங்கி வந்திருந்தார். தன் மகனிடம் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்து, அதையெல்லாம் தான் எவ்வளவு பிரயாசப்பட்டு மகனுக்காக வாங்கினேன் என்றெல்லாம் கூறினார். மகனோ தழுவி விசாரித்தார். அவன் சொன்னான், ‘அப்பா இந்தப் பொருட்கள் எல்லாம் எனக்கு வேண்டாம். நீங்கள் தான் எனக்கு வேண்டும். நீங்கள் பிரயாசப்பட்டு வாங்கினது உண்மைதான். ஆனால் நான் அவைகளுக்காக ஏங்கவில்லை. நீங்கள் என்னோடு கூடவே இருக்கணும். என்னோடு நிறைய நேரம் பேசனும். நான் உங்கள் மடியில் உட்கார்ந்து விளையாடனும். அது தான் என் ஆசை’ என்றானாம்.

பிரியமானவர்களே! ஆண்டவரின் தாகமும் அதுதான். எத்தனைதான் செய்தாலும், எத்தனை காணிக்கை கொடுத்தாலும், அவையெல்லாவற்றையும் விட அவர் பிரியப்படுவது எல்லாம் எதன் மேல் தெரியுமா? நீங்கள் அவரோடு அமர வேண்டும் நேரம் செலவிட பண்ணவேண்டும் அவர் பாதத்தில் காத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் தான், தாகம் தான் அவருக்கு, அறிந்து கொண்ட நீங்கள் தாகம் தீர்க்க ஆயத்தமா!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE