வீட்டில் தண்ணீர் சொட்டுவதினால் இப்படியும் நடக்குமா நமக்கு?

நம் அனைவரின் வீட்டிலேயும் தண்ணீர் டேங்க் உண்டு. அதில் இருந்து குழாய் வழியாக வரும் தண்ணீரை நாம் பயன்படுத்துவது வழக்கம். தினமும் காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை என்று அவ்வப்போது அந்த டேங்க் நிரப்பிவைத்துக்கொள்வோம். அப்படியாக நம்முடைய வீட்டில் உபயோகப்படுத்திவருகிறோம். சிலநேரம் குழாயை திறந்து தண்ணீர் பிடித்துவிட்டு சரியாக குழாயைமூடாமல் அவசரமாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிடுவோம். அதிலிருந்து ஒவ்வொரு சொட்டாக தண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும். சொட்டு தானே என்று சிலநேரம் பார்த்தும் பார்க்காமலும் கீழே ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு சென்றுவிடுவோம். இது நம் எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒரு சாதாரண விஷயம். ஆனால் அந்த ஒவ்வொரு சொட்டும் கீழே விழும் போது நாம் நிரப்பி வைத்திருந்திருந்த டேங்க் தண்ணீர் குறைந்துகொண்டேவரும். ஒருகட்டத்தில் முக்கியமான வேலை செய்துகொண்டிருக்கும்போது தண்ணீர் சுத்தமாக தீர்ந்துவிடும். அப்போது மிகுந்த சிரமத்திற்குள்ளாக வேண்டியதாயிருக்கும்.

அதுபோல நாம் வேதத்தை வாசித்து அதை மனதில் நிறுத்தும்போது, அடுத்தவர்கள் பிரச்சனை என்று வரும் போது அந்த அந்த வசனங்களை சொல்லி அவர்களை தேற்றி அனுப்பிவிடுவோம். அதோடு நில்லாமல் நாம் மறுபடியும் மறுபடியும் வேதத்தை வாசித்து தேவனின் வார்த்தைகளால் நம் இருதயத்தை நிரப்பிவைத்து கொள்ளவேண்டும். எப்போதோ வாசித்த வசனங்களை வைத்து பலநாட்கள் ஓடிவிட்டால் ஒரு நேரம் நாம் பிரச்னையை சந்திக்கும்போது நமக்கு தேவனின் வார்த்தையின் பெலன் இல்லாமல் போய்விடும்.

நீதிமொழியில், “உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது, அதை கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்” என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் தான் நம்முடைய பெலன் உள்ளது. எப்படி வீட்டில் உள்ள தண்ணீர் டேங்க் அடிக்கடி நிரப்பிவைத்துக் கொள்ளுகிறோமோ அதே போல் அடிக்கடி வேதத்தை வாசித்து நம் இருதயத்தை வேதவசனங்களால் நிரப்பிவைத்துக்கொள்ளவேண்டும். தேவனின் வார்த்தையை தினமும் வேதத்தை வாசித்து நிரப்பிக்கொள்ளும் போது சூழ்நிலை எப்படியாக இருந்தாலும் நாம் பிழைத்துக்கொள்வோம்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE