ஆசீர்வாதம் – Blessing – பாக்கியங்கள் – வாழ்த்து என்றால் என்ன?

நமது இந்த உலக வாழ்வில் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு சொல் ” ஆசீர்வாதம், “! ஆனால் இதன் உண்மையான் பொருளை உணராமல் இதை ஒரு ” மந்திரச் சொல்லாகப் ” பயன்படுத்துகிறோம்.
திருமறையில் ஆசீர்வாதம் என்றால் கடவுளின் பாதுகாப்புக்காக மன்றாடுதல் – A Blessing is Prayer for God’s Protection.

God’s Favor and Protection.

பழைய ஏற்பாட்டில் ஆசீர்வாதம் என்பதைக் குறிக்க இரண்டு எபிரேயச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1). Barak இதற்கு
Praise – புகழ்தல்
Congratulate – வாழ்த்துதல்
Salute – வணக்கம் கூறுதல்
என்று பொருள்.

2). Esher
இதற்கு மகிழ்ச்சி என்று பொருள்.

புதிய ஏற்பாட்டில் இரண்டு கிரேக்கச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1). Makarious
இதற்கு
Happiness – மகிழ்ச்சி என்று பொருள்.

2). Eulogies
இதற்கு

Good Words – நல்ல வார்த்தைகள் என்று பொருள்.( ஒருவரைப் புகழ்ந்து பேசும் நல்ல வார்த்தைகள்.
இந்த வார்த்தையிலிருந்துதான் Eulogy என்னும் ஆங்கில வார்த்தை உறுவாகியது. மரித்தவரைப் புகழ்ந்து பேசும் இறுதி அஞ்சலி வார்த்தைகள் ).

இந்த வார்த்தைகளின் அடிப்படையில் திருமறையில் ” ஆசீர்வாதம் ” என்பதன் திரண்ட கருத்துக்கள் என்னவென்றால்:

1). வாழ்த்துதல்
ஆதி:1:22
தேவன் அவைகளை – நீர் வாழும் உயிரினங்கள் – ” ஆசீர்வதித்து ” , நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலங்களை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருக்க்கடவது என்றும் சொன்னார்.
ஆதி:1:28
ஆதாம் ஏவாளையும் இவ்வாறுதான் வாழ்த்தினார் கடவுள்.
ஆபிராமையும் கடவுள் இவ்வாறே வாழ்த்துகிறார்.
ஆதி:12:1-3; 22:16-18
ஆதி:24:60 இல் ரெபேக்காவை அவரது வீட்டார் இவ்விதமாகத்தான் ” வாழ்த்து “கிறார்கள்.

2). மகிழ்ச்சி
யோபு:5:17
இதோ தேவன் தண்டிக்கிற மனுஷன் ” பாக்கியவான் “.
தகப்பன் தன் பிள்ளைகளை அதிகமாக ” நேசிப்பதால்தான் ” அவர்களைக் கண்டிக்கிறார். கடவுளால் கண்டிக்கப்படுகிறேன் என்பதே இங்கு ” மகிழ்ச்சி “!

3). கடவுளை அறியும் அறிவு
சங்:1:1-3
கர்த்தருடைய வேத்த்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவரது வேத்த்தில் தியானமாயிருக்கிற மனுஷன் ” பாக்கியவான் “!
ஆண்டவரை அறிவதே நமது ” ஆசீர்வாதம் !!!

4). துன்பங்களிலும் ஆண்டவர்மீது நம்பிக்கை
மத்தேயு:5
லூக்கா:6:20-38
பசியிலும், தரித்திரத்திலும், இயேசுவினிமித்தம் மக்களால் பகைக்கப்படும் சூழ்நிலைகளிலும், நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாயச் சொல்வார்களானால் ” பாக்கியவான்களாயிருப்பீர்கள் “!
இதுதான் உண்மையான ” ஆசீர்வாதம் “!!!

5). பாவமன்னிப்பு
சங்:32:1
எவனுடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்
ரோமர்:4:6-8 ஐயும் வாசித்துப் பாருங்கள்.

6). ஓய்வுநாள்
ஆதி:2:3
தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார.
ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள ஆசீர்வாதம் ஓய்வுநாள்.
அனைத்து நாட்களிலும், குறிப்பாக ஓய்வுநாளில் நாம் ஆண்டவரை வழிபட வேண்டும்.

7). நற்செய்தி
ரோமர்:15:29
கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ” ஆசீரவாதத்தோடே ” வருகிறேன்.
ஆம், ஆண்டவருடைய நற்செய்தியை இவ்வுலகம் அனைத்திற்கும் ஆசீர்வாதம்.
ஆவிக்குரிய வாழ்வு
எபே:1:3
விண்ணகம் சார்ந்த ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.
ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தால்தான், அதாவது ஆண்டவருடன் இணைந்து வாழ்ந்தால்தான் இந்த ஆசீர்வாதத்தை நாம் பெற முடியும்.

9). ஆண்டவர் இயேசு கிறிஸ்து
கலா:3:14
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால்புறஜாதிகளுக்கு வரும்படியாகவும்…
ஆண்டவர் இயேசுவே புற இனத்தவருக்கும் நமக்கும் ” ஆசீர்வாதமாக ” இருக்கிறார்.

10). மரணம்
வெளி:14:13
கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் ” பாக்கியவான்கள் “! ஆம், ஆண்டவருக்கள் மரிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இவர்கள் சொகுசான வாழ்வு அந்தஸ்து சாதியம் உலகதாய நன்மைகள் எதையும் உடையவர்கள் அல்ல. ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தில் தங்கள் ஆடைகளைத் தோய்த்தவர்கள். ஆண்டவருக்காக இவ்வுலகில் துன்புறும் வாழ்வு மூலம் நற்செய்தியைக் கூறியவர்கள். இவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் மரணம்தான் நிறைவான ஆசீர்வாதம். அதன் மூலமே அவர் நிலை வாழ்வை அடைய முடியும். ஆண்டவரின் அருள் உங்களுடன் இருப்பதாக.

Rev. J. Augustine Jeevakani
( Tamilnadu Theological Seminary )

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE