ஒரு முறை ஒரு இளம் வாலிபன். தன்னுடைய போதகரிடம் வந்தான் !
அந்த வாலிபன் போதகரிடம் ” நீங்க புகை பழக்கம் தவறு என்று பிரசங்கம் செய்கிறீர்கள். ஆனால் பைபிள் அப்படி எந்த வசனமும் கிடையாது, ஒரே ஒரு வசனத்தை மட்டும் காட்டுங்கள் நான் புகை பிடிப்பதை இன்றே விட்டு விடுகிறேன்” என்றான்.
அதற்கு அந்த போதகர் “அப்போ இப்பொழுதும் நீ புகை பிடித்து கொண்டுதான் உள்ளாயா? என்றார்.
அவன் “எனக்கு அதில் தவறாக ஏதும் தெரியவில்லை” என்றான்.
அந்த போதகர்
“சரி, முதன் முதலாக எப்பொழுது எங்கு பிடித்தாய்!? என்று நியாபகம் இருக்கா!? என்று கேட்டார்.
அதற்கு அவன் “முதன் முதலாக பணம் எடுத்து கொண்டு கடைக்கு சென்று யாராவது வருகிறார்களா? என சுற்றிலும் பார்த்து விட்டு, யாரும் இல்லை என தெரிந்து வாங்கி வந்து கழிவறையில் சென்று பிடித்தேன்” என்றான்.
அடுத்த பயமில்லை. இப்பொழுது எங்கு பிடிக்கின்றாய் !? என்றார் அவன்
“நான் என் அப்பா முன்னாடியே, நண்பர்கள் முன்னாடியே
ஏன் பொது வெளியிலே பிடிக்கிறேன் என்றான். எனக்கு தவறாக தெரியவில்லை” என்றான்.
அதற்கு அந்த போதகர்
“முதல் முறை பிடிக்கும் போது உன் மனது என்ன கூறியது “தவறு “என்று கூறியது என்றான்.
முதல் முறை பிடித்த பொது தவறு என கூறியதே அதுதான் உண்மை.அதுதான் மனசாட்சி !!! என்றார். அந்த வாலிபன் உள்ளம் குத்தபட்டு, தவறை உணர்ந்து சென்றுவிட்டான்.
நாம் செய்வது ஒரு வேலை நம்முடைய நண்பர்கள், குடும்பத்தினர், துணைக்கு தவறாக தெரியாமல் இருக்கலாம் ஆனால் நம்முடைய மனசாட்சி என்ன கூறுகிறது என்று பாருங்கள்.
சில நேரங்களில் நம்முடைய மனசாட்சியை தள்ளிவிட்டு விடுகிறோம். விசுவாச கப்பலை சேதபடுத்துறோம்.
மனசாட்சியை தள்ளி விட்டு பாவம் செய்தாலும் நாம் செய்கின்ற பாவம் கூட பாவமாக தெரியாது!!!
Author: Sis. Meena Juliet