Irukiravarum Irundhavarum Varubavarumaame Lyrics Song Chords PPT - இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ

இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்குமாறாதவரே – 2

உம்மை துதிக்கிறோம்
உம்மை போற்றுகிறோம்
உம்மை தொழுகிறோம்
உம்மில் மகிழ்கிறோம் – 2 (இருக்கிறவரும்)

1. எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் ஆத்ம நேசரே
என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே – 2
இஸ்ரவேலின் சேனை அதிபனே – எனக்காய்
யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே – 2 (உம்மை)

2. நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே
தடை உடைத்தும் வழி திறக்கும் வல்ல நாதனே – 2
யூதா கோத்திர ராஜ சிங்கமே நாங்கள்
ஜெயம் எடுப்போம் உந்தன் நாமத்தில் – 2 (உம்மை)

3. அரவணைத்து ஆற்றி தேற்றும் அன்பு கரங்களில்
அர்ப்;பணித்தோம் என்னை முற்றும் ஏற்றுக் கொள்ளுமே – 2
கரம் பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளை நீர் திறந்திடுவீரே – 2 (உம்மை)

Irukiravarum Irundhavarum Varubavarumaame lyrics songs, Irukiravarum Irundhavarum Varubavarumaame song lyrics, Irukiravarum Irundhavarum Varubavarumaame Lyrics Song Chords PPT - இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create