ஜகநாதா, குரு பரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!
திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,
தீதறும் வேத போதா! செக
முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
நரதேவனாக வந்தாய் மொழியாலோ?
எளிய வேஷந் தரித்தே இங் கவதரித்தாலும்,
இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;
ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
உடு வழி காட்டிடப் புரிந்தாயே.
அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்
மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே.
மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே.
தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
மேவி அனுபவிக்க நேர்ந்தாயே.
அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,
ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே?
எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, jaganaatha gurubaranaatha songs, jaganaatha gurubaranaatha songs lyrics
Sign in to access this feature Sign Up
Jagannatha, Guru Paranatha, Thiru
Arul Naatha, Yesu Prasaatha Naatha!
Thigazhurum thaatha, pugazhurum paatha,
Theetharum vedha bodha! sega
Murgalam aadimainthar mosha pisaasu thanthira
Moi kondu kaniyunda pazhiyalo?
Narkaalam nee therinthu navindra vannam parinthu
Narathevanaaga vandhaai mozhiyalo?
Eliya vesham tharithae ing avadharithaalum,
Imaiyor vandhirainjida therindhaayae;
Oliseiyum panimudi uyar mannar thozhumpadi
Udu vazhi kaattida purindhaayae.
Arun thavan kaiyil thangi, anbinbak kadal pongi,
Aalayathil thuthikka kalithaayae,
Varum thava mathiyaal mun mara mannan thedida, un
Malar mugam kaattaamal olithaayae.
Makkal ulak kalangam maasatoli vilanga,
Madhura prasangam yaarkkum uraithaayae;
Sikkadar thun manathai thiruthi, arathin viththai
Thiruth thayai koornthu evarkkum vithaithaayae.
Thanaiyar val noyai kanda thaayaar marundhut konda
Thagaimai enap peranbu koornthaayae;
Vinaiyar vem paava kedu vilaga ariya paadu
Mevi anubavikka nerndhaayae.
Amarar mutrum ariyaar, adigal sattum ariyaar,
Aar un thiral arivaar, Karthavae?
Emathu pavam poruthae, irakkam emmel uguthae,
Emaip puranthaalum maana parthavae.
ஜகநாதா, குரு பரநாதா, திரு அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!
Jaganaatha, Guru Paranaatha, Thiru Arul Naatha, Yesu Prasaadha Naatha!
திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா!
Thigalurum Thaatha, Pugalurum Paatha, Theetharum Veda Bodha!
முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
Murkaalam aadhi maindhar mosa pisaasu thanthira moi kondu kani unda pazhiyaalo?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து, நரதேவனாக வந்தாய் மொழியாலோ?
Narkaalam nee therindhu, navindra vannam parindhu, naradevanaaga vandhaai mozhiyaalo?
எளிய வேஷந் தரித்தே இங்கு அவதரித்தாலும் இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;
Eliya vesham tharithae ingu avatharithaalum imaiyor vandhirainjidath therindhaayae;
ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி உடு வழி காட்டிடப் புரிந்தாயே.
Oli seyyum panimudi uyar mannar thozhumpadi udu vazhi kaattida purindhaayae.
அருந் தவன் கையில் தங்கி அன்பின்பக் கடல் பொங்கி ஆலயத்தில் துதிக்க களித்தாயே;
Arun thavan kaiyil thangi anbinba kadal pongi aalayathil thuthikka kalithaayae;
வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட உன் மலர் முகம் காட்டாமல் ஒளித்தாயே.
Varum thava mathiyaal mun mara mannan thedida un malar mugam kaattaamal olithaayae.
மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
Makkal ulak kalangam maasatral oli vilanga madhura prasangam yaarkkum uraithaayae;
சிக்கடர் துன் மனத்தைத் திருத்தி அறத்தின் வித்தை திருத் தயை கூர்ந்து எவர்க்கும் விதைத்தாயே.
Sikkadar thun manathai thiruthi arathin viththai thiruth thayai koorndhu evarkkum vidhaithaayae.
தனையர் வல் நோயைக் கண்ட தாயார் மருந்துட் கொண்ட தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
Thanaiyar val noyai kanda thaayaar marundhutt konda thagaimai enap peranbu koorndhaayae;
வினையர் வெம்பாவக் கேடு விலக அரிய பாடு மேவி அனுபவிக்க நேர்ந்தாயே.
Vinaiyar vem paava kedu vilaga ariya paadu mevi anubavikka nernthaayae.
அமரர் முற்றும் அறியார் அடிகள் சற்றும் அறியார் ஆர் உன் திறல் அறிவார் கர்த்தாவே?
Amarar muttrum ariyaar adigal sattum ariyaar aar un thiral arivaar karthavae?
எமது பவம் பொறுத்தே இரக்கம் எம்மேல் உகுத்தே எமைப் புரந்தாளும் மானப் பர்த்தாவே.
Emathu pavam poruthae irakkam emmel uguthae emai purandhaalum maana parthavae.
ஜகநாதா, குரு பரநாதா, திரு அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!
O Lord of the world, divine Guru and Lord of grace, Jesus, the blessed Savior!
திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா!
Radiant Father, glorious path, and sacred teacher of the flawless scriptures!
முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
Was it because the ancient forefather was deceived by the cunning devil into eating the forbidden fruit?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து, நரதேவனாக வந்தாய் மொழியாலோ?
Did you choose the right time and come as a divine human King out of compassion?
எளிய வேஷந் தரித்தே இங்கு அவதரித்தாலும் இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;
Though you came in humble form, even the heavenly beings knew to worship you.
ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி உடு வழி காட்டிடப் புரிந்தாயே.
You revealed the way so that even mighty kings might bow and worship you.
அருந் தவன் கையில் தங்கி அன்பின்பக் கடல் பொங்கி ஆலயத்தில் துதிக்க களித்தாயே;
You delighted in dwelling in the hands of saints and in the overflowing ocean of divine love and praise.
வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட உன் மலர் முகம் காட்டாமல் ஒளித்தாயே.
To humble the proud seeker-king, you hid your beautiful divine face.
மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
You preached sweet words so that the darkness in people’s hearts would be cleansed by pure light.
சிக்கடர் துன் மனத்தைத் திருத்தி அறத்தின் வித்தை திருத் தயை கூர்ந்து எவர்க்கும் விதைத்தாயே.
You corrected troubled minds and sowed the seed of righteousness and mercy in all.
தனையர் வல் நோயைக் கண்ட தாயார் மருந்துட் கொண்ட தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
You showed great compassion by healing children’s severe diseases and comforting mothers.
வினையர் வெம்பாவக் கேடு விலக அரிய பாடு மேவி அனுபவிக்க நேர்ந்தாயே.
You endured great suffering to remove the terrible burden of human sin.
அமரர் முற்றும் அறியார் அடிகள் சற்றும் அறியார் ஆர் உன் திறல் அறிவார் கர்த்தாவே?
Even angels and saints cannot fully understand your greatness, O Lord.
எமது பவம் பொறுத்தே இரக்கம் எம்மேல் உகுத்தே எமைப் புரந்தாளும் மானப் பர்த்தாவே.
Forgive our sins, pour out mercy upon us, and rule over us, O gracious Lord.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List