Karthar Kirubai Endrum Ullathu Lyrics Song Chords PPT - கர்த்தர் கிருபை என்றும் உள்ளது

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது
என்றென்றும் மாறாதது – 2
ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை
ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே – 2

கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர் – 2
பெரியவர் பரிசுத்தர்
கிருபைகள் நிறைந்தவர்
உண்மை உள்ளவர் – 2

1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
கரத்தை பிடித்து நடத்தினாரே – 2
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே – 2

2. வியாதி படுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே – 2
விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே – 2

3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே – 2
வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
தைரியப்படுத்தி நடத்தினாரே – 2

Karthar Kirubai Endrum Ullathu lyrics songs, Karthar Kirubai Endrum Ullathu song lyrics, Karthar Kirubai Endrum Ullathu Lyrics Song Chords PPT -கர்த்தர் கிருபை என்றும் உள்ளது

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create