உன்னை கால்நடையாய் நடக்கப்பண்ணும்
அப்சலோமை கண்டு நீ கலங்காதே
அழைத்தவர் கைவிடுவாரோ }2
நீ வளர்த்ததே உன்னை நடுவீதியிலே
நாள் தோறும் நடக்க பண்ணுதோ }2
பரம திட்டத்தை உனக்கு தந்தவர்
கைவிடுவாரோ விட்டு விலகிடுவாரோ }2
கரை சேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரை ஏரிடும் நாள் இனிதே வரும் }2
அலைந்து திரிந்திடும் உன் ஜனங்களைக் கண்டு
உன் கண்கள் தினம் கண்ணீர் சொரியுதோ }2
நம்பத்தக்கவர் உன்னை நடத்தி செல்வதால்
கவலைப் படாதே நீ கலக்கம் கொள்ளாதே }2
கரை சேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரை ஏரிடும் நாள் இனிதே வரும் }2
உன் இறுதி நாட்களை நான் களிப்பாக்குவேன்
கெம்பீரமாய் உறங்க செய்திடுவேன்
நன்மையானதை உனக்கு தந்திடுவேன்
உன் கிளைகள் மீது படர செய்திடுவேன்
நான் நன்மையானதை உனக்கு தந்திடுவேன்
உன் கிளைகள் மீது படர செய்திடுவேன்செய்திடுவேன்
கரை சேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரை ஏரிடும் நாள் இனிதே வரும் }2
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional Absalomai songs, Bro.john wesely , Absalomai songs, Absalomai songs lyrics