சாப்பாடு சூப்பர்| Tamil Christian Message

தன் நண்பன் தாமஸின் அழைப்பை ஏற்று அவனுடைய வீட்டுக்கு விருந்துண்ணும்படி வந்திருந்தான் ஐஸக். அவன் ஒரு புகைப்படக் கலைஞன் என்பதால், தன்னுடைய சிறந்த புகைப்படங்கள் சிலவற்றைத் தன் நண்பனுக்குக் காண்பிக்கும்படி எடுத்துவந்திருந்தான். அவற்றைப் பார்த்த தாமஸ் தன் நண்பனின் திறமையை வியந்து பாராட்டினான் தன் மனைவி ஜெஸியிடமும் அவற்றைக் காண்பித்தான். அவளோ கொஞ்சம் துடுக்காகப் பேசக்கூடியவள். புகைப்படங்களைப் பார்த்தவள் ஐஸக்கிடம் கூறினாள்: "நீங்க வைத்திருக்கிறது ரொம்ப நல்ல கேமரான்னு நினைக்கிறேன்; அது தான் உங்க புகைப்படங்கள் ரொம்ப அழகா இருக்கு "அவள் கூறியது தனக்கு என்னவோ போலிருந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளவில்லை ஐஸக். உணவருந்தி முடித்ததும் சிறிது நேரம் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்து வீட்டுக் கிளம்பும்போது ஜெஸியிடம் திரும்பி, "சாப்பாடு சூப்பர்" என்றான். முகமெல்லாம் புன்னகையுடன், "தேங்ஸ்" என்றாள் ஜெஸி. ஐஸக் கூறினான், "நீங்க சமைக்கிற பாத்திரங்கள் எல்லாம் ரொம்ப நல்ல பாத்திரங்கள்-னு நினைக்கிறேன்" என்றார். மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவரகளுக்குச் செய்யுங்கள். மத்.7:12

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create