5 வழிகள் - நம் பிள்ளைகள் இயேசுவை நேசித்து வளர.- Tamil Christian Message

ஒரு அருமை சகோதரிக்கு 11 முதல் 21 வயது என ஆறு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் சொல்லும்போது, எங்களை பார்ப்பவர்கள் எப்போதும் என்னிடம் கேட்கும் கேள்விகள் இவைகள் என சொல்ல ஆரம்பிக்கிறார்கள். 

*எப்படி எல்லா பிள்ளைகளையும் ஒருவருக்கொருவர் நேசித்து இருக்க கற்றுக்கொடுக்கின்றீர்கள்?
*பிள்ளைகளிடம் அவர்களுக்குள் சகோதர உறவுகளை வளர்க்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
*எப்படி இயேசுவை நேசிக்கும் குழந்தைகளாக வளர்கின்றீர்கள்?

உண்மையை சொல்லவேண்டுமென்றால், இதற்கு பதில் உடனே என்னால் சொல்லமுடியாது. ஆனாலும் இது எவ்வளவு முக்கியமான கேள்வி என்று அறிந்துகொண்டேன். எதிர்காலத்தில் சந்திக்க போகும் சூழ்நிலைக்கு தேவ வார்த்தையின் படி, அதன் உண்மைத்துவத்தை எப்படி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வது? இயேசுவை நேசிக்கும் குழந்தைகளாக எப்படி அவர்களை வளர்ப்பது?

மேலும் அவர் தொடர்கிறார், நானும் என் கணவருமாக எங்கள் பிள்ளைகளின் நிஜ வாழ்கையில் கடந்த 20 வருடமாக இக்கேள்விகளுக்கான பதில்களை செய்துகொண்டு வருகின்றோம். அதற்கான சில கொள்கைகளையும் நாங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றோம்.

1. பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாய் இருந்து வழிநடத்துவது: 
நல்லதோ கெட்டதோ, பெற்றோர்கள் விரும்பும் விஷயங்களால் குழந்தைகள் கவரப்படுகிறார்கள். 
நம் குழந்தைகள் நாம் தொடர்ந்து எதற்கெடுத்தாலும், இயேசுவையே நோக்கிப் பார்ப்பதைக் காண வேண்டும், ஏனென்றால் நாம் அப்படியாக செய்யும்போது, பிள்ளைகளால் சிந்திக்காமல் இருக்க முடியாது, "அம்மா யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்த முடியாத அளவுக்கு, அப்படி மிகவும் அற்புதமானது இயேசுவிடம் என்ன இருக்கிறது?" என்று.

பின்னர் அவர்கள் சுயமாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு, அவர்களுடைய சந்தோஷத்திலும் துக்கதிலும், அவர்கள் கழுத்தை நெரிக்கும் சூழ்நிலை வரும்போதும், தான் பெற்றோர்கள் செய்வதை நினைவுக்கு கொண்டுவந்து அதையே செய்வார்கள். நீங்கள் இயேசுவை எல்லாவற்றிலும் நோக்கிப்பார்ப்பதை, உங்கள் பிள்ளைகள் உங்களை கவனிப்பார்கள்.

2.குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை வேதாகமத்தோடு ஒப்பிட்டு பேசுங்கள்: 
பிள்ளைகள் வேதாகமக் கதைகளின் உண்மைத்துவத்தை அவர்கள் மனத்திறைக்கு கொண்டுவருவதை போல சக்திவாய்ந்தது வேறொன்றுமில்லை. சில முடிவுகளை குடும்பத்தில் எடுக்கும் போது அல்லது பிள்ளைகள் வளர்ந்து வரும் காலங்களில் அவர்களாகவே சில முடிவுகளை அவர்கள் எடுக்கும் வேளைகளில், "அன்று அந்த சூழ்நிலையில் தாவீது செய்தது போல.... அல்லது ஒருவேளை சீஷர்கள் இந்த சூழ்நிலையில் இப்படி செய்திருந்தால்...." என வேதத்தின் சம்பவங்களை மேற்கோடிட்டு காட்டும் போது, அது பிள்ளைகளுக்கு அவர்களின் ஒவ்வொருநாளும் எடுக்கும் முடிவுகளை எளிதாக, தேவனின் வார்த்தையின் அடிப்படையோடு எடுக்க உதவியாக இருக்கும்.

3.எளிமையாக பிள்ளைகளை கையாளுங்கள்: 
நீங்கள் குடும்பமாய் அமர்ந்து தேவனை ஆரதிப்பதற்கு, எதாவது ஒரு நேரத்தை அதற்கென ஒதுக்கிவைத்து, தினமும் அந்நேரத்திலே செய்யுங்கள், அல்லது நேரம் எப்போது கிடைக்கிறதோ அப்பொழுது செய்யுங்கள். ஆனால் தினமும் செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். காலை உணவுக்கு முன்னால் செய்யலாம் அல்லது படுக்கைக்கு போவதற்கு முன் செய்யலாம். குடும்பமாய் அமர்ந்து பாடல் பாடலாம், துதிக்கலாம், வேதம் வாசிக்கலாம் அல்லது வேதத்தின் ஒரு பகுதியை தியானிக்கலாம். முடிந்தவுடன் இன்றைய வேதபகுதியில் இருந்து என்ன புரிந்துக்கொண்டோம் என கலந்துரையாடலாம். 

பிள்ளைகள் கண்டிப்பாக செய்யவேண்டும் என்ற நோக்கம் நிலையாக இருக்கவேண்டும் ஆனால் அதை எளிமையான முறையில் அவர்கள் வாழ்கையில் நடைமுறைபடுத்த வேண்டும்.

4.இயேசுவின் நற்செய்தியை கொண்டாடுங்கள்: 
நீங்கள் வாழ்கையில் எந்தப் பருவத்தில் இருந்தாலும், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அல்லது நீங்கள் கொண்டாடும் வெற்றிகளாய் இருந்தாலும் அல்லது பண்டிகைகள் என எதுவாக இருந்தாலும், ஒரு குடும்பமாக கூடி முதலாவது இயேசு கிறிஸ்து ஏன் எதற்காக இவ்வுலகிற்கு வந்தார் என சிந்தித்து, அவர் நம்மேல் வைத்த தயவிற்கு நன்றி செலுத்த ஒரு கணம் ஒதுக்குங்கள். பாவத்திலிருந்து எங்களை மீட்டதற்காகவும், பிதாவிடம் மன்னிப்பு பெற்றுக்கொள்ள, மீண்டும் அவருடன் இணைய ஒரு வழியை எங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க தன்னுடைய சொந்த குமரனை தந்தருளினதற்காக நன்றி செலுத்தி ஜெபியுங்கள். இப்படி செய்யும் இந்த சின்ன காரியம் உங்கள் பிள்ளைகளின் இருதயத்தில் ஆழமாக பதிந்து, அந்த எண்ணம் அடிக்கடி சில சூழ்நிலைகளின் மத்தியில் அவர்களின் நினைவுக்கு வரும்.


5.உறவுகளின் அடிப்படையில் ஒரு வீட்டு உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:
பெற்றோர்களாகிய நீங்கள் செய்யும் தொழிலை வைத்து அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியை வைத்து உங்கள் குடும்பத்திற்க்கென ஒரு அடையாளத்தை மிகவும் எளிமையாக ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். காலங்கள் நடுவே தொழிலையோ அல்லது உங்கள் வீடுகளையோ மாற்றும் போது அடையாளமும் மாறுகிறது. ஆனால் உறவுகளினால் உண்டான அடையாளங்கள் என்றுமே மாறுவது இல்லை. 

அதே போல தான், நாம் தேவனோடு வைத்திருக்கும் உறவு. வாழ்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும் நம்மை நிலைநிறுத்துவது அந்த அடித்தளமான தேவனோடு கொண்ட உறவு தான். நம் பிள்ளைகளுக்கு எப்படி உறவுகளை ஒரு குடும்பத்துக்கு அடையாளம் காட்டுகின்றோம். அதே போல் தேவனோடு உள்ள உறவே நம் குடும்பத்தின் அடையாளம் என்று சொல்லும் போது அவர்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

அன்போடு குடும்பத்தை தேவனுக்கு நேராக நடத்துவது என்பது ஒரு பெரிய காரியம். ஆனால் மேலே நாம் வாசித்தது போல பிள்ளைகளிடம் நடந்து, தேவனின் கிருபையால் அவர்கள் இருதயத்தில் தேவனை நேசித்து வாழ வார்த்தைகளை விதைப்போம். நிச்சயம் தேவன் அதை விளையச் செய்வார்.

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create