Kallamurun Kadaiyenu Lyrics Song Chords PPT - கள்ளமுறுங் கடையேனுங்

கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை
வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சனநிதியை
உள்ளமுவப் புறுதேனை யுயிர்க்குயிரை யுலவாத
தெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே.

படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திரு
மடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுக
முடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்
கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே.

பொய்த்திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும் எத்திருக்கு முடையேமை யெண்ணியொரு பொருட்டாகப்
பத்திருக்கும் பிரமாணப் படியொழுகி வினைமுடித்த
சித்திருக்குஞ் செழுந்தவனைச் சிலுவைமிசைக் கண்டேனே.

மூவினைக்கு மும்முதலாய் மும்முதலு மொருமுதலாந்
தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்
நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் றனித்தாயைத்
தீவினைக்கோ ரருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே.

மூவாத முதலவனை முதுசுருதி மொழிப்பொருளை
ஓவாத பெருங்குணத்த வுத்தமனை யுலகனைத்தும்
சாவாத படிகாக்கத் தநுவெடுத்துத் துசங்கட்டுந்
தேவாதி தேவனையான் சிலுவைமிசைக் கண்டேனே.

துன்னெறிபுக் குழல்கின்ற தூர்த்தரிலுந் தூர்த்தனாய்ப்
பன்னெறிகொள் பரசமயப் படுகுழிவீழ்ந் தழிவேற்கு
நன்னெறியின் றுணிபுணர்த்தி நயந்திதயக் கண்டிறந்து
செந்நெறிகாட் டியகுருவைச் சிலுவைமிசைக் கண்டேனே.

அந்தரதுந் துமிமுழங்க வமரரெலாந் தொழுதேத்தத்
தந்தைதிரு முனமகிமைத் தவிசிருந்த தற்பரனை
நந்தம்வினை தொலைத்திடற்காய் நரனாகி நலிந்திரத்தஞ்
சிந்தியுயி ரவஸ்தையுறச் சிலுவைமிசைக் கண்டேனே.

நிந்தனைசெய் திருப்பாணி நிரையழுத்திக் கொலைபுரியும்
வெந்தொழிலர் செய்வினையின் விளைவறியார் பொறுத்தருளும்
எந்தையென வெழிற்கனிவா யிதழவிழெம் பெருமானைச்
செந்தனிக்கோல் கொளுந்தேவைச் சிலுவைமிசைக் கண்டேனே.

மறம்வளர்க்குங் களருளத்தை வளமலிதண் பணையாக்கி
அறம்வளர்க்கு மருண்முகிலி னன்புமழை மாரிபெய்து
புறம்வளர்க்கு மிரட்சிப்பின் புகழமைந்த புண்ணியத்தின்
திறம்வளர்க்குஞ் செழுங்கிரியைச் சிலுவைமிசைக் கண்டேனே.

காயொளியிற் கதிர்பரப்புங்களங்கமினீ தியின்சுடரைப்
பாயொளிகொள் பசும்பொன்னை பணிக்கருஞ்சிந் தாமணியைத்
தூயொளிகொ ணித்திலத்தைத் தூண்டாத சுடர்விளக்கைச்
சேயொளிகொள் செம்மணியைச் சிலுவைமிசைக் கண்டேனே.

Kallamurun Kadaiyenu , Kallamurun Kadaiyenu lyrics songs, Kallamurun Kadaiyenu song lyrics, Kallamurun Kadaiyenu Lyrics Song Chords PPT - கள்ளமுறுங் கடையேனுங்

Sign in to access this feature Sign Up

Kallamurun Kadaiyenu Lyrics Song Chords PPT - கள்ளமுறுங் கடையேனுங் Lyrics in English

Kallamurung kadaiyenum kadaiththera perungarunai
Vellamugan tharul pozhiyum vimalalochananidhiyai
Ullam uvappurudhenai uyirkkuyirai ulavaadha
Thellamudhai theenganiyai siluvai misaik kanden

Padisaaytha perumpaava param sumandhu paramar thiru
Madisaaytha thirumeni vadhainthizhi sengurudhiyuga
Mudisaaytha perumaanai moodhalagai thalai nasukki
Kodisaaytha kottavanai kurusin misaik kanden

Poithirukkum vanjanaiyum pollangum purankootrum
eththirukku mudaiyaamai enni oru poruttaaga
Paththirukkum pramaanappadi ozhugi vinai mudiththa
Siththirukkum chelundhavanai siluvai misaik kanden

Moovinai kum mum mudhalaai mum mudhalum oru mudhalaan
Devinaikkai thozhudhaeththum thirikarana suththarum
Naavinaikkondu aeththariya nallaaraththin thanith thaayai
Theevinaikku or arumarundhai siluvai misaik kanden

Moovaadha mudhalavanai mudhuchuruthi mozhip porulai
Ovaadha perungunaththa uththamanai ulaganaiththum
Saavaadha padi kaakka thanuveduththu thuzhangattum
Devaadhi devanai naan siluvai misaik kanden

Thunneri pukku uzhalgindra thurththarilum thurththanaai
Panneri kol parasamayap padukuzhi veezhndh azhiverku
Nanneriyin thuni punarththi nayandhidhayak kandirandhu
Senneri kaattiya guruvai siluvai misaik kanden

Antharaththum thumimulanga amararellaam thozhudhaeththa
Thandhai thiru mun magimai thavisi irundha tharp paranai
Nandham vinai tholaiththidarkaai naranaagi nalindhiraththam
Sindhi uyir avasthai ura siluvai misaik kanden

Nindhanai sei thiruppaani nirai azhuththi kolai puriyum
Vendh thozhilar sei vinaiyin vilaiyariyaar poruththarulum
Endhai ena ezhil kanivaai idhazh avizh em perumaanai
Sendhanikkol kolundhae vai siluvai misaik kanden

Maram valarkkum kalar ullaththai valamali than panaiyaakki
Aram valarkkum arunmugilin anbu mazhai maari peidhu
Puram valarkkum iratchippin pugazh amaindha punniyaththin
Thiram valarkkum chezhungiriyai siluvai misaik kanden

Kaayoliyil kadhir parappum kalangam inri thin sudarai
Paayoli kol pasum ponnai panikkarunjin dhaamaniyai
Thooyoli kondiththilaththai thoondaadha sudar vilakkai
Seeyoli kol semmaniyai siluvai misaik kanden

Kallamurun Kadaiyenu Lyrics Song Chords PPT - கள்ளமுறுங் கடையேனுங் Lyrics in English (Tanglish)

கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை
வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சனநிதியை
Kallamurung kadaiyenum kadaitherap perungarunai
Vellamugan tharul pozhiym vimalalosana nidhiyai

உள்ளமுவப் புறுதேனை யுயிர்க்குயிரை யுலவாத
தெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே
Ullam uvappurudhenai uyirkkuyirai ulavaadha
Thellamudhai theenganiyai siluvai misai kandene

படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திரு
மடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுக
Padisaaytha perumpaava param sumandhu paramar thiru
Madisaaytha thirumeni vadhainthizhi sengurudhi uga

முடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்
கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே
Mudisaaytha perumaanai moothalagai thalai nasukki
Kodisaaytha kottravanai kurusin misai kandene

பொய்த்திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும்
எத்திருக்கு முடையேமை யெண்ணியொரு பொருட்டாகப்
Poiththirukkum vanjanaiyum pollangum purankootrum
Eththirukku mudaiyemai enni oru poruttaaga

பத்திருக்கும் பிரமாணப் படியொழுகி வினைமுடித்த
சித்திருக்குஞ் செழுந்தவனைச் சிலுவைமிசைக் கண்டேனே
Paththirukkum pramaanap padiyozhugi vinai mudiththa
Siththirukkum chezhundhavanai siluvai misai kandene

மூவினைக்கு மும்முதலாய் மும்முதலு மொருமுதலாந்
தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்
Moovinaiyukku mum mudhalaai mum mudhalum oru mudhalaan
Devinai kai thozhudhu eththum thirikarana suththarundham

நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் றனித்தாயைத்
தீவினைக்கோ ரருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே
Naavinai kondu eththariya nall araththin thanith thaayai
Theevinaikku or arumarundhai siluvai misai kandene

மூவாத முதலவனை முதுசுருதி மொழிப்பொருளை
ஓவாத பெருங்குணத்த வுத்தமனை யுலகனைத்தும்
Moovaadha mudhalavanai mudhu surudhi mozhi porulai
Ovaadha perungunaththa uththamanai ulaganaiithum

சாவாத படிகாக்கத் தநுவெடுத்துத் துசங்கட்டுந்
தேவாதி தேவனையான் சிலுவைமிசைக் கண்டேனே
Saavaadha padi kaakka thanu eduththu thusangattum
Devaadhi devanaiyaan siluvai misai kandene

துன்னெறிபுக் குழல்கின்ற தூர்த்தரிலுந் தூர்த்தனாய்ப்
பன்னெறிகொள் பரசமயப் படுகுழிவீழ்ந் தழிவேற்கு
Thunneeripuk kuzhalgindra thoorththarilum thoorththanaai
Panneeri kol parasamayap padukuzhivilzhnthazhiveRku

நன்னெறியின் றுணிபுணர்த்தி நயந்திதயக் கண்டிறந்து
செந்நெறிகாட் டியகுருவைச் சிலுவைமிசைக் கண்டேனே
Nanneriyin thunippunarndhu nayandhidha yak kandirandhu
Senneeri kaattiya guruvai siluvai misai kandene

அந்தரதுந் துமிமுழங்க வமரரெலாந் தொழுதேத்தத்
தந்தைதிரு முனமகிமைத் தவிசிருந்த தற்பரனை
Andharadhum thumimuzhanga amarellaam thozhudheththa
Thandhai thiru mun magimai thavisi irundha tharp paranai

நந்தம்வினை தொலைத்திடற்காய் நரனாகி நலிந்திரத்தஞ்
சிந்தியுயி ரவஸ்தையுறச் சிலுவைமிசைக் கண்டேனே
Nandham vinai tholaiththidarkkaai naranaagi nalindhiraththam
Sindhi uyir avasthai ura siluvai misai kandene

நிந்தனைசெய் திருப்பாணி நிரையழுத்திக் கொலைபுரியும்
வெந்தொழிலர் செய்வினையின் விளைவறியார் பொறுத்தருளும்
Nindhanai sei thiruppaani nirai azhuththi kolai puriyum
Vendh thozhilar seivinaiyin vilaiyariya poruththarulum

எந்தையென வெழிற்கனிவா யிதழவிழெம் பெருமானைச்
செந்தனிக்கோல் கொளுந்தேவைச் சிலுவைமிசைக் கண்டேனே
Endhai yena ezhil kanivaai idhazh avizh em perumaanai
Sendhanik kol kolundha dhevai siluvai misai kandene

மறம்வளர்க்குங் களருளத்தை வளமலிதண் பணையாக்கி
அறம்வளர்க்கு மருண்முகிலி னன்புமழை மாரிபெய்து
Maram valarkkum kalar uzhaththai valam alithu than paanai aakki
Aram valarkkum arul mugilin anbu mazhai maari peidhu

புறம்வளர்க்கு மிரட்சிப்பின் புகழமைந்த புண்ணியத்தின்
திறம்வளர்க்குஞ் செழுங்கிரியைச் சிலுவைமிசைக் கண்டேனே
Puram valarkkum iratchippin pugazh amaindha punniyaththin
Thiram valarkkum chezhungiriyai siluvai misai kandene

காயொளியிற் கதிர்பரப்புங்களங்கமினீ தியின்சுடரைப்
பாயொளிகொள் பசும்பொன்னை பணிக்கருஞ்சிந் தாமணியைத்
Kaay oliyil kadhir parappum kalangam inidhiya sudarai
Paay oli kol pasum ponnai pani karun chindhaamaniyai

தூயொளிகொ ணித்திலத்தைத் தூண்டாத சுடர்விளக்கைச்
சேயொளிகொள் செம்மணியைச் சிலுவைமிசைக் கண்டேனே
Thooy oli kon niththilaththai thoondaadha sudar vilakkai
Sei oli kol semmaniyai siluvai misai kandene

Kallamurun Kadaiyenu Lyrics Song Chords PPT - கள்ளமுறுங் கடையேனுங் Lyrics in English (Song Meaning)

கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை
வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சனநிதியை
Your great mercy that saves even the lowliest sinner
The pure fountain that pours out abundant grace

உள்ளமுவப் புறுதேனை யுயிர்க்குயிரை யுலவாத
தெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே
The sweetest nectar seen upon the cross
The life within life I beheld upon the cross

படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திரு
மடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுக
Bearing the burden of great sin in His holy body
His sacred body wounded, flowing with blood

முடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்
கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே
The crowned Lord crushing the ancient serpent
The victorious King I saw upon the cross

பொய்த்திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும்
எத்திருக்கு முடையேமை யெண்ணியொரு பொருட்டாகப்
He considered us worthy despite deceit and evil
He valued us as precious though we were sinful

பத்திருக்கும் பிரமாணப் படியொழுகி வினைமுடித்த
சித்திருக்குஞ் செழுந்தவனைச் சிலுவைமிசைக் கண்டேனே
He fulfilled the law and completed redemption
The righteous One I saw upon the cross

மூவினைக்கு மும்முதலாய் மும்முதலு மொருமுதலாந்
தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்
The Triune One, worthy of worship in all three persons
Pure in thought, word, and deed

நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் றனித்தாயைத்
தீவினைக்கோ ரருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே
The source of righteousness beyond words
The remedy for sin I saw upon the cross

மூவாத முதலவனை முதுசுருதி மொழிப்பொருளை
ஓவாத பெருங்குணத்த வுத்தமனை யுலகனைத்தும்
The eternal One, essence of ancient scriptures
The supreme One with unfailing goodness

சாவாத படிகாக்கத் தநுவெடுத்துத் துசங்கட்டுந்
தேவாதி தேவனையான் சிலுவைமிசைக் கண்டேனே
To save us from death, He took human form
The God of gods I saw upon the cross

துன்னெறிபுக் குழல்கின்ற தூர்த்தரிலுந் தூர்த்தனாய்ப்
பன்னெறிகொள் பரசமயப் படுகுழிவீழ்ந் தழிவேற்கு
Though surrounded by the wicked and deceitful
He delivered me from falling into destruction

நன்னெறியின் றுணிபுணர்த்தி நயந்திதயக் கண்டிறந்து
செந்நெறிகாட் டியகுருவைச் சிலுவைமிசைக் கண்டேனே
He guided me to the right path with love
The true Guru I saw upon the cross

அந்தரதுந் துமிமுழங்க வமரரெலாந் தொழுதேத்தத்
தந்தைதிரு முனமகிமைத் தவிசிருந்த தற்பரனை
Heaven resounded with praise as angels worshipped
The Supreme One seated in the glory of the Father

நந்தம்வினை தொலைத்திடற்காய் நரனாகி நலிந்திரத்தஞ்
சிந்தியுயி ரவஸ்தையுறச் சிலுவைமிசைக் கண்டேனே
To remove our sins, He became man and suffered
I saw Him shedding blood and life upon the cross

நிந்தனைசெய் திருப்பாணி நிரையழுத்திக் கொலைபுரியும்
வெந்தொழிலர் செய்வினையின் விளைவறியார் பொறுத்தருளும்
He endured the mockery and cruelty of evil hands
Forgiving those who did not understand their deeds

எந்தையென வெழிற்கனிவா யிதழவிழெம் பெருமானைச்
செந்தனிக்கோல் கொளுந்தேவைச் சிலுவைமிசைக் கண்டேனே
Calling Him “Father,” the gracious and beautiful Lord
The One with pure rule I saw upon the cross

மறம்வளர்க்குங் களருளத்தை வளமலிதண் பணையாக்கி
அறம்வளர்க்கு மருண்முகிலி னன்புமழை மாரிபெய்து
Turning hardened hearts into fruitful fields
Pouring love like rain from the cloud of grace

புறம்வளர்க்கு மிரட்சிப்பின் புகழமைந்த புண்ணியத்தின்
திறம்வளர்க்குஞ் செழுங்கிரியைச் சிலுவைமிசைக் கண்டேனே
Granting protection and glory through righteousness
The mighty source of goodness I saw upon the cross

காயொளியிற் கதிர்பரப்புங்களங்கமினீ தியின்சுடரைப்
பாயொளிகொள் பசும்பொன்னை பணிக்கருஞ்சிந் தாமணியைத்
A radiant light shining like the sun without blemish
Like pure gold and precious gems in brilliance

தூயொளிகொ ணித்திலத்தைத் தூண்டாத சுடர்விளக்கைச்
சேயொளிகொள் செம்மணியைச் சிலுவைமிசைக் கண்டேனே
A spotless pearl, an unfading lamp of light
The radiant jewel I saw upon the cross

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create