பொங்குதே ஆனந்தம் – புவி
எங்குமே இல்லாப் பேரானந்தம்
வையகம் தந்திடா இன்பம்
இயேசு ஐயன் அளித்த ஆனந்தம்
பொய்யனுக்கோ புகழவொண்ணா நாசம்
மெய்யன் அகற்றினார் என் பாவ தோஷம்
--- பொங்குதே ஆனந்தம் ---
பரலோக மேன்மை துறந்து
நரலோக மானிடனாய் பிறந்து
எவர்க்குமே கிடையாத சிலாக்கியம்
பரமனை நம்புவோர்க்கு அளித்தார் நற்பாக்கியம்
--- பொங்குதே ஆனந்தம் ---
குருசினில் சிந்தின இரத்தம்
குரு இயேசுவில் உண்டான சுத்தம்
கல்வாரியில் தெய்வ மகத்துவம், நேசம்
கல்லான இதயமும் கனிந்திடும் பாசம்
--- பொங்குதே ஆனந்தம் ---
பாவ பரிகார நாமம்
கொடும் ரோகப் பரிகார நாமம்
சர்வலோகத்திலும் மேலான நாமம்
சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாமம்
--- பொங்குதே ஆனந்தம் ---
வானவன் சபையினுள் வந்து
பல தானங்களைத் தந்து
சரீரமாம் சபை பூரணமாக
சற்குணங்கள் கொண்டு அலங்கரித்தாரே
--- பொங்குதே ஆனந்தம் ---
மணவாளன் வேகமே வருவார்
மணவாட்டியை வானில் சந்திப்பார்
ஆ! இன்பமே எனக்காகுமே அந்நாள்
ஆத்ம நேசர் இயேசுதான் வரும் பொன்னாள்
--- பொங்குதே ஆனந்தம் ---
Pongkuthe Aanantham - Puvi lyrics songs, Pongkuthe Aanantham - Puvi lyrics,Pongkuthe Aanantham - Puvi Lyrics Song Chords PPT -பொங்குதே ஆனந்தம்
Sign in to access this feature Sign Up
Pongkuthe Aanantham - Puvi
Engkume Illa Peranantham
Vaiyakam Thanthita Inpam
Iyesu Aiyan Aliththa Aanantham
Poyyanukko Pukazha Vonna Nasam
Meyyan Agarrinar En Pava Thosham
... Pongkuthe Aanantham
Paraloka Menmai Thuranthu
Naraloka Manithanay Piranthu
Evarkkume Kitaiyatha Silakkiyam
Paramanai Nampuvorkku Aliththar Nalpakkiyam
... Pongkuthe Aanantham
Kurusinil Sinthina Iraththam
Kuru Iyesuvil Untana Suththam
Kalvariyil Theyva Makaththuvam Nesam
Kallana Ithayamum Kaninthitum Pasam
... Pongkuthe Aanantham
Pava Parikara Namam
Kotum Roga Parikara Namam
Sarva Lokaththilum Melana Namam
Sarva Janaththirkum Iratchanya Namam
... Pongkuthe Aanantham
Vanava Sapaiyinul Vanthu
Pala Thanangkalai Thanthu
Sariramam Sapai Puranamaka
Sarkunangkal Kondu Alangkariththare
... Pongkuthe Aanantham
Manavalan Vegame Varuvar
Manvattiyai Vanil Santhippar
Aa Inpame Enakkagume Annal
Aathma Nesar Iyesuthan
Varum Ponnal
... Pongkuthe Aanantham
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List