சித்தம் கலங்காதே பிள்ளையே
செய்வதெ னென்று
சுத்தனுக்குன் நிலை காட்டு
குவலையெல்லாம் நீ யோட்டு
அத்தனே உந்தனை மீட்டு
அரவணைப்பார் நீ சாட்டு
மெய்யானுக்குன் குறை சொல்லு
வேண்டியதடைந்து கொள்ளு
துய்யனிடம் நீ செல்லு
துர் ஆசாபாசங்கள் வெல்லு
எங்கே நானேகுவே னென்று
ஏங்கித் தவிக்காதே நின்று
துங்க னெல்லாத்தையும் வென்று
சுகமளிப் பாரோ வென்று
பரலோக வாழ்வை நாடு
பரன் தயவை நீ தேடு
தரை யின்பம் விட்டுப் போடு
தகாக் கவலை விட் டோடு
Siththam Kalangaathae Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song , Keerthanai song,Siththam Kalangaathae Song Lyrics ,Siththam Kalangaathae Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song