தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன்
எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன்
மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னை
மறுபடி சேர்த்துக்கொண்டார்
முத்திரை மோதிரம் கொடுத்து விட்டார்
இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்துவித்தார்
இனி அடிமை நான் இல்லையே
சொந்த மகனாக மாற்றினீரே
என் கால்கள் சறுக்கி தடுமாறும் நேரம்
தோள்களில் ஏற்றி சுமந்து சென்றார்
என் பாதை தவறி போகாமல் இருக்க
பாத இரட்சையை உடுத்துவித்தார்
உயர்வோ தாழ்வோ எவைகள் இருந்தாலும்
உந்தனின் அன்பில் நிலைத்திருப்பேன்
மரணமோ ஜீவனோ எது நேர்ந்தாலும்
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேன்.
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas.Asborn sam songs, pas. Pas.Asborn sam songs lyrics, Thagapanin songs lyrics, Thagapanin- songs, Thagapanin- songs lyrics