100 ரூபாய் எங்கே? ஆண்டவரே | Tamil Christian Message

ஒரு தபால் நிலையத்திலுள்ள அலுவலர்கள், அன்று அனுப்பப்பட வேண்டிய தபால்களைப் பிரித்துக் கொண்டிருந்தபோது ஒரு விசித்திரமான கடிதம் அவர்கள் கண்களில் பட்டது. அதில் பின்வருமாறு எழுதியிருந்தது "அன்புள்ள ஆண்டவரே, 80 வயதான மூதாட்டியான எனக்கு மாதந்தோறும் வருகிற பென்ஷன் பணம் 1000 ரூபாய். இந்த மாதம் ஏதோ காரணத்தினால் எனக்குக் கிடைக்கவில்லை. அப்பணத்தை நம்பி விருந்தினர்கள் சிலரை அழைத்திருக்கிறேன். அந்தப் பணம் இல்லாவிட்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. தயவு செய்து என் முகவரிக்கு நீர் ஒரு 1000 ரூபாய் பணம் அனுப்பி வைத்தீரானால் பேருதவியாக இருக்கும்". கடிதத்தைப் படித்த தபால் நிலைய ஊழியர்கள் அம்மூதாட்டியின் மேல் பரிதாபம் கொண்டு அவருக்கு எப்படித் தங்களால் உதவ முடியும் என்று யோசித்தனர். முடிவில் ஒவ்வொருவரும் தங்களிடமிருந்த பணத்தை கொடுப்பதென்று தீர்மானித்தனர். 900 ரூபாய் பணம் சேர்ந்தது. அதை அப்படியே ஆண்டவர் அனுப்புவது போன்று அம்மூதாட்டியின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் அம்மூதாட்டியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 'அன்புள்ள ஆண்டவரே, நீர் அனுப்பி வைத்த பணம் என் விருந்தினர்களை கவனிக்கவும், என் செலவினங்களுக்கும் மிக உதவியாக இருந்தது. மிக்க நன்றி. ஆனால் எனக்கு ஒரு வருத்தம்; நீர் அனுப்பின 1000 ரூபாய் பணத்தில் 900 ரூபாய் மட்டுமே என் கைக்கு வந்தது. மீதி 100 ரூபாய் எங்கே போனதென்று தெரியவில்லை. எனக்கென்னவோ தபால் நிலைய ஊழியர்கள் மேல் தான் சந்தேகம். அநேகமாக அவர்கள் தான் அப்பணத்தைத் திருடியிருக்க வேண்டும். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். யோவான் 14:14

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create