இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திற்குப் பெயர்தான் கொல்கொதா. இது எருசலேமுக்கு வெளியே அமைந்துள்ள ஒரு சிறு குன்று மாதிரியான பகுதி. குன்று என்று சொல்வதைக் காட்டிலும் மேடு என்று சொல்லலாம். இந்த கொல்கொதா என்பதற்கு "தலைஓடு" என்று அர்த்தம். இப்பெயர் வர இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று இந்த குன்றை தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு மண்டையோட்டை நிறத்தி வைத்த மாதிரி தோன்றும். இரண்டாவது இந்த குன்று குற்றவாளிகளை சிலுவையலறைந்து கொலைக்களமாக பயன்படுத்தப்பட்டதால் இந்த இடத்தில் அநேக தலையோடுகள் கிடந்தன. அதைக்காரணமாக கொண்டும் இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். கி.பி. 70ல் யூதர்கள் எருசலேமை விட்டு துரத்தப்பட்ட பின்பு இந்த இடத்தை யாரும் பயன் படுத்துவதில்லை. ஆனால் இப்போது இந்த கொல்கொதா மலையில் பரிசுத்த கல்லறை தேவாலயம் என்ற பெயரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டுள்ளது