புதிதாய் திருமணமான ஒரு தம்பதியர் முதன் முதலாக குடும்ப வாழ்வை தொடங்கும் முன் ஆண்டவரிடம் ஜெபித்து வாழ்வை தொடங்க எண்ணினர். மனைவி இரட்சிக்கப்பட்டு ஜெபிக்க கற்றிருந்தார்கள். கணவனுக்கோ ஜெபம் என்றால் என்ன என்றே தெரியாது. ஆகவே முதலில் மனைவி ஜெபிப்பதை பார்த்து தான் ஜெபிக்க தீர்மானித்தார். மனைவி இப்படி ஜெபித்தார்கள். எங்கள் அன்பு தகப்பனே! இயேசப்பா, எங்களை வாழ்வில் இணைத்தீர் உமக்கு நன்றி. தொடர்ந்து எங்கள் வாழ்வை ஆசீர்வதியும். இயேசப்பா எங்கள் வாழ்நாளெல்லாம் சகல நன்மைகளாலும் நிரம்பும்படி கிருபை செய்யும், இயேசுவின் நாமத்தில் ஆமென். அடுத்து கணவன் இப்படி ஜெபித்தார். எங்கள் அன்பு இயேசு மாமா! எங்களை வாழ்வில் இணைத்ததற்காக நன்றி. இயேசுமாமா எங்களை ஆசீர்வதியும், இயேசுமாமா நாமத்தில் ஆமென். ஜெபம் முடிந்த உடன் மனைவி திடுக்கிட்டு, என்னங்க இப்படி இயேசுவை மாமா என சொல்லி ஜெபித்தீங்க என்று கேட்டார்கள். அவர் சொன்னார், நீ அப்பா என்று ஜெபித்தாய். உனக்கு அவர் அப்பா என்றால் எனக்கு மாமா தானே, அதனால்தான் அப்படி ஜெபித்தேன் என்று கூறினார். இன்றைக்கும், சில கிறிஸ்தவர்கள் கூட ஜெபத்தின் உண்மையான நோக்கம் என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுடைய வாழ்வில் ஆசீர்வாதமில்லை.