முட்டாள்களின் தினம்| Tamil Christian Message

நாத்திகன் ஒருவன் Floridaவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கை நடத்திய ஒரு நீதிபதியைக் குறித்து ஒரு கதை.... அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி நாத்திகர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட தினம் இல்லாமலிருப்பது நியாயமற்றது என்று அவன் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக வழக்குத்தொடுத்திருந்தான். நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.உடனே நாத்திகனின் வழக்கறிஞர் "கிறிஸ்துவர்களுக்குக் கிறிஸ்மஸ்ம், ஈஸ்டர் என்றும். இந்துக்களுக்கு திபாவளி உள்ளன. யூதர்களுக்கு பஸ்கா உள்ளன. ஆனால் என்னுடைய கட்சிக்காரருக்கு மதசம்மந்தமான எந்த விடுமுறையும் இல்லை", என்பதை மிகுந்த வேகத்துடன் தெரிவித்தார். "நாத்திகர்களுக்கு இருக்கிறது! நாட்காட்டியில்(calander) ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்களின் தினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்று ஆணித்தரமாகக் நீதிபதி கூறினார் மேன்மைதங்கிய அந்த நீதிபதி, " தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான்" என்று சங்கீதம் 14.1 உள்ள வசனத்தைக் குறிப்பிட்டார். எனவே, உம்முடைய கட்சிக்காரர் தேவன் இல்லையென்று கூறுவானானால் அவன் ஒரு மதிகேடன் எனவே ஏப்ரல் 1ம் தேதி அவனுக்குரிய நாளாக இருக்கிறது. இப்பொழுது நீதிமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது"" என்று கூறினார்

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create