அந்த அழகிய மணிமண்டபத்தில் ஒரு புறாக் கூட்டம் கூடுகள் கட்டி வாழ்ந்து வந்தன. அங்கே வருகிற சுற்றுலாப் பயணிகள் தானியங்களை வீசும்போது இறக்கைகளை விரித்து சிறகடித்து வட்டமிடும் தரையில் அமர்ந்து தானியங்களைப் பொறுக்கும் அழகைக் கண்டு பயணிகள் ரசிப்பர். இப்படியாக இந்த புறாக் கூட்டம் அலைந்து திரியாமல் உணவு சாப்பிடுவதை கண்டு ஒரு காகத்திற்கு ஆசை வந்தது. தானும் புறாவைப் போல தன் இறக்கைகளையும் சரீரத்தையும் அலங்கரித்துக் கொண்டு புறாக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது. எங்கும் அலையாமல் தினமும் வயிறார ஆகாரம் கிடைத்தது. ஒரு நாள் அந்த மண்டபத்தில் செத்துப் போன எலியை காவலாளி தூக்கி வெளியே எறிந்தான். இரை உண்டு கொண்டிருந்த புறாக் கூட்டத்திற்குள் அந்த செத்த எலி விழுந்தது. புறாக்கள் அந்த நாற்றத்தைக் கண்டு விலகின. மாறுவேடத்திலிருந்த காகத்திற்கோ ஜொள்ளு கொட்டியது. நைஸாக சென்று அந்த எலியைக் கொத்தியது. அதன் வேஷம் கலைந்தது. நண்பர்களே... நாமும் கூட சபைக்கு செல்லுகிறவர்கள், இயேசுவை அறிந்தவர்கள் என்று சொல்லுகிறோம். ஆனால் மாமிச இச்சை, உலக கவலை, பண ஆசை போன்ற செத்த எலிகள் நம்மை பரிசுத்தத்தை விட்டு வழி விலகச் செய்கிறது. வேஷம் போடுவதை விடுவோடும். சர்வாயுத வர்க்கத்தை தரிப்போம்.