ஒரு போதகர் தன் சபையின் ஓய்வுநாள் பள்ளிக் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டார்: ""யோனாவை மீன் விழுங்கியது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மையாக இருக்குமா? மீனின் உடல் பெரிதாக இருந்தாலும் அதன் தொண்டை சிறியதாகத் தானே இருக்கும்? அது எப்படி யோனாவை விழுங்கியிருக்க முடியும்?'' ஒரு சிறுமி எழுந்தாள். ""ஐயா, வேதம் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். யோனாவை மீன் விழுங்கினதும் மூன்று நாட்களுக்குப் பின் கரையில் கக்கியதும் உண்மை. அதற்குப் பின், தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்து யோனா ஊழியத்தை நிறைவேற்றியதால், அவர் மரித்ததும் பரலோகம் சென்றிருப்பார் என்பதையும் நான் நம்புகிறேன்''- என்றாள். ""அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?''- என்றார் போதகர். ""உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நான் மரித்து, பரலோகம் சென்றதும் பார்த்துவிட்டு வந்து உங்களுக்கு சொல்கிறேன்'' -என்றாள் அவள். போதகர் அவளிடம், ""சரி....ஒருவேளை யோனா நரகத்திற்குச் சென்றிருந்தால்....?'' என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி சொன்னபதில்: ""அப்படியானால், நீங்கள் அங்கு போகும்போது பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்!'