சுவிட்சர்லாந்து நாட்டைச்சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றிருந்த ஒரு பெண்மணி ஒரு ஆட்டு மேய்ப்பனைச் சந்தித்தார். மேய்ப்பன் நடுவில் அமர்ந்து இருக்க, ஆடுகள் யாவும் அவனைச் சுற்றிப் படுத்திருந்தன. சற்று தூரத்தில் ஒரே ஒரு ஆடுமட்டும் தனியாகப் படுத்திருந்தது. அந்த ஆட்டைப் பார்த்தபோது அது மிகவும் வேதனைக் குள்ளாக இருப்பது போலத் தோன்றிற்று. அருகில் வந்து பார்த்தபோது அதன் ஒரு கால் ஒடிந்து போயிருந்தது. பரிதாபப் பட்டு மேய்ப்பனிடம் கேட்டபோது "அதன் காலை நான் தான் ஒடித்தேன்" என்றான். பின்பு ஏன் என்றும் விவரித்தான். "என்னுடைய மந்தையிலுள்ள எல்லா ஆடுகளிலும் என் சொல் கேளாமல்,தான் தோன்றித் தனமாகத் திரியும் ஆடு இது ஒன்றுதான். நான் ஆடுகளை அழைத்துச் செல்லும்போது இது தொடர்ந்து வருவதில்லை. சில வேளைகளில் அதாள பாதாளமுள்ள மலை அருகிலும் இது சென்று விடும். எவ்வளவோ முயன்றும் இதைத் திருத்த முடியவில்லை.மாறாக இது வேறு ஆடுகளையும் கீழ்படியாமைக்கு வழி நடத்த ஆரம்பித்தது. என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில், நான் இதன் காலை ஒடித்து விட்டபடியால், சில நாட்களில் இது மிகவும் கீழ்ப்படிதலுள்ள, மற்ற ஆடுகளுக்கு ஒரு முன்மாதிரியான, ஆடாக மாறிவிடும். முழுமையான மாறுதல் இதற்கு ஏற்பட்டு விடும்" ஏன்று கூறினான். பெண்மணி ஆச்சரியமுற்றார்கள். சில வேலைகளில் நாம் தேவனை விட்டு வழி விலகிச் செல்லும்போது தெய்வீக சிட்சைகள் நமக்குக் கிடைக்கின்றன. தேவன் நம்மிடம் மிகவும் அன்பாக இருக்கிறபடியால், நம்மை அப்படியே விட்டுவிடாமல் தன் பாதையில் சேர்த்துக்கொள்ள இந்த தண்டனைகள் கிடைக்கின்றன. தண்டனைகளைக் கண்டு தேவ நாமத்தை தூஷிப்பதற்குப் பதிலாக அவருடைய அன்பை உணர்ந்து இன்னும் அவரோடு நெருங்கி வாழ வேண்டியது அவசியம். தண்டனைகள் தேவ நாமத்தை மகிமைப்படுத்தட்டும்.