ஒரு மனிதன் தனது வீட்டில் அடிக்கடி பிசாசு வந்து கதவைத்தட்டுகிறபடியால் இயேசுவை அழைத்து மேல் மாடியை அவருக்கு உரிமையாகக் கொடுத்து, தங்கும்படி கூறினான். இயேசு வீட்டில் இருப்பதால் இனிப்பிசாசு கதவைத்தட்டமாட்டான் என எண்ணினான். ஆனால் மறுபடியும் பிசாசு கதவைத்தட்டினான். ஆகவே இம்மனிதன் இயேசுக்குத் தனது கீழ் அறையையும் கூடக்கொடுத்தான். மறுபடியும் அதே தொல்லை....இயேசு அமைதியாயிருந்தார். அந்த மனிதன் இயேசுவிடம் வந்து தனது வீட்டு சாவிக் கொத்தைக் கொடுத்து ஆண்டவரே இனி இந்தவீடு முழுவதும் உம்முடையது. இனி என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லையென்று கூறிவிட்டான். அன்று பிசாசு கதவைத்தட்டினான். இயேசு எழுந்து கதவைத்திறந்தார். பிசாசு ஒரே ஓட்டமாக ஓடியே போனான். அப்படியே உங்கள் வாழ்க்கையின் முழுமையையும் அவரிடம் ஒப்புக்கொடுங்கள்.