பரலோகத்தில் பிரவேசிக்க அவரசப்பட்ட ஒருவரை வாசலில் நின்ற தேவதூதன், தடுத்து நிறுத்தினான். "உன்னை நான் ஏன் உள்ளே அனுமதிக்க வேண்டும்? அதை பத்து வாக்கியங்களில் எனக்குச் சொல். 100 மார்க்குகள் வாங்கினால் உள்ளே போகலாம்" என்றான். அவர் சொல்ல ஆரம்பித்தார். "நான் ஞாயிற்றுக்கிழமைதோறும், தவறாமல் ஒழுங்காக ஆலயத்திற்குச் சொல்லுவேன்" என்றார். அதற்கு தேவதூதன் 2 மார்க்கு போட்டான். "நான் காணிக்கை உற்சாகமாய் கொடுப்பேன். எங்கள் ஊர் பள்ளிக்கூடம் "நான் கட்டிக்கொடுத்தது தான்" என்றான். அதற்கு தூதன் 3 மார்க்குகள் போட்டான். "ஓய்வு நாள் பாட சாலையில், பத்து ஆண்டுகளாக ஆசிரியராக இருந்திருக்கிறேன்." என்றான். அதற்கு 5 மார்க்குகள் கிடைத்தது. வேறு என்னனென்ன செய்தேன்? அவர் யோசித்தார். "ஆம், நான் ஆலயப் பாடகர் குழுவில் சேர்ந்து கிறிஸ்துமஸ் கேரல் பாடியிருக்கிறேன்". சரி, இதற்கு 2 மார்க்கு தருகிறேன் என்றான் தூதன். இந்த நிலையில் தான் மார்க்குகள் வாங்கிகொண்டிருந்தால், பரலோத்தில் பிரவேசிக்க முடியாது என்று அறிந்த, அவர் உடல் வியர்த்துக் கொட்டியது! நடுக்கத்தோடு தூதனிடம் சொன்னார், "ஐயா, தேவ கிருபையினாலே, விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டேன். இது என்னாலுண்டானதல்ல, அது தேவனுடைய ஈவு. கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தின் புண்ணியத்தாலேயே.... அவர் சொல்லி முடிப்பதற்குள், பரலோக வாசல் திறவுண்டன. "நூறு மார்க்குகள்" என்றான். தேவதூதன். உற்சாகத்தோடு அவர் உள்ளே பிரவேசித்தார். "தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்". (எபே 2:4,5)