வாழ்க்கைத் துணை | Tamil Christian Message

"மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, ஏற்றத் துணையை அவனுக்கு உண்டாக்குவேன்" ஆதி 2:18. நான் தனிமையாக இருப்பது நல்லதல்ல, எனக்கு ஓர் துணை வேண்டும் என்று ஆதாம் எண்ணவில்லை. அப்படி ஓருவேளை அவன் தானாக ஒரு துணையை தேடி அலைந்திருந்தால் அவனுக்கு என்ன கிடைத்திருக்கும் தெரியுமா? மரம், செடி, கொடிகளும், பறவைகளும், மிருகங்களுமே. ஆனால் இந்த பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டபடியால் ஆதாமுக்கு ஏவாள் என்ற மனுஷியை ஏற்றத் துணையாக கொடுத்தார். இன்று வாழ்க்கைத் துணையை தெரிந்து கொள்ளும் யாவரும் கடவுளை ஏற்படுத்திக் கொடுக்கச் சொல்லாமல் தன் சொந்த முயற்சியில் ஈடுபடும்போது அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு கிடைப்பது உயர்திணை பொருளாக இல்லாமல் மரம், செடி, கொடிகள் போன்ற கீழ்தரமான குணங்களையுடைய அல்லது நடத்தையுடைய ஒருவர் தான். ஒருவருக்கு ஒருவருர்தான் இறைவன் ஏற்படுத்தினது. அந்த ஒருவர் யார் என்று அவருக்குதான் தெரியும். ஆகவேதான் அவர் ஏற்படுத்த வேண்டும். அந்த ஒருவர் இல்லாமல் வேறொருவர் நமது சுயநலத்திற்கேற்ப அமைக்கும்போது அவர்கள் உயர்திணையாக இல்லாமல் அஃறிணையாகவே அமைவர். ஏன் என்றால் ஏவாளுக்கு நிகர் ஏவாளே, வேறு யாரும் இருக்க முடியாது. மூதாட்டியார் ஒருவர் பள்ளிமாணவன் ஒருவனுக்கு ஆலோசனை கூறும்போது "உனது அன்றாட வாழ்கைக்காக மூன்று முறை இப்போதிருந்தே ஜெபிக்க வேன்டும் என்று சொன்னார். அப்படி மூன்று முறை இல்லை என்றாலும் ஒரு முறையாவது தினமும் ஜெபிக்கும் எந்த ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்ற ஓர் துணையை தேவன் ஏற்படுத்தி கொடுக்காமல் போய்விடுவாரா என்ன? நண்பர்களே! நீங்கள் வாலிபராய் இருந்தால் இன்றே ஜெபிக்க ஆரம்பியுங்கள். பெற்றோராய் இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு இதை வலியுறுத்துங்கள். "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்" பிரசங்கி 3:11

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create