கடிகாரத்தை வணங்கிய மக்கள்| Tamil Christian Message

அநேக ஆண்டுகளுக்குமுன், அமெரிக்காவை சார்ந்த மிஷனரி ஒருவர், பிரெசில் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் ஊழியம் செய்து வந்தார். ஒரு விசை அவர் விடுமுறையை கழிக்க தன் நாட்டிற்கு வந்தபோது ஒரு அழகான சூரிய கடிகாரத்தைக் கண்டு அதை வாங்கி தான் ஊழியம் செய்து வந்த கிராம மக்களுக்காக எடுத்துச் சென்றார். அக்கடிகாரத்தின் பயனை அறிந்த கொண்ட அந்த கிராமத் தலைவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஊரின் நடுவில் ஒரு மேடைகட்டி கடிகாரத்தை அதன் மேல் வைக்க உத்தரவிட்டார். அக்கடிகாரம் வேலை செய்யும் விதத்தை அறிந்து, கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். காலம் கடந்தது ஒரு நாள் அவ்வழியாக வந்த மிஷனரி அக்கடிகாரத்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். ஏனெனில், அந்த சூரிய கடிகாரத்தை மழையினின்றும், வெயிலினின்றும், பாதுகாப்பதற்காக அதன் நான்குபுறமும் சுவர் எழுப்பி மேலே கூரையும் அமைத்து தெய்வமாகப் பத்திரமாக வைத்திருந்தனர். மிஷனரியை மறந்தது விட்டனர். சூரிய கடிகாரத்தின் மூலம் மக்களை கடவுள் பக்கம் இழுக்க நினைத்த மிஷனரியின் நோக்கம் நிறைவேறவில்லை. மக்கள் கடிகாரத்தால் ஈர்க்கப்பட்டனர். இறுதியில் கடிகாரத்தையே தெய்வமாக சேவிக்க ஆரம்பித்தனர். இதே செயலைத் தான் இஸ்ரவேல் மக்களும் எண்ணிய ஆண்டவரின் நோக்கம் மக்களால் நிறைவேற்றப்படவில்லை. அவர்களை மகிழ்விக்க ஆண்டவர் கொடுத்த மன்னா, இறைச்சி, கறைபடியாத ஆடை, நல்ல தண்ணீர் போன்றவைகளால் ஈர்க்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் இவைகளுக்காக வாழவும் போராடவும் ஆரம்பித்தனர். தேவனை மறந்து செயல்பட தொடங்கினர். இன்று நீங்கள் சிந்திக்க வேண்டிய காரியம் இது. உங்கள் எண்ணம் முழுவதும் உங்களைப் படைத்த தேவனில் இருக்கின்றதா? அல்லது அவர் படைத்தவைகளில் உள்ளதா?

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create