பாவம் உங்களை நேசிக்கும்| Tamil Christian Message

ஒருமுறை ஒரு வாலிபன் ஒரு வினோதமான கோட் அணிந்திருந்தான். அந்த கோட்டின் முன் பகுதியில் பெரிய ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அதே வேளையில் அந்த கோட்டின் பின்புறமாக கழுத்துப்பட்டையில் ஒரே ஒரு சிறிய ஒட்டு மட்டும் போடப்பட்டிருந்தது. ""எதற்காக இப்படி ஒட்டுக்கள் போட்ட கோட்டை அணிந்திருக்கிறாய்?'' என்று ஒருவர் அவனைப் பார்த்து கேட்டார். அதற்கு அந்த வாலிபன், "சார், இந்த கோட்டின் முன் பகுதியிலுள்ள இந்த பெரிய ஒட்டுக்கள் என்னுடைய நண்பர்கள், அயலகத்தாருடைய பாவங்களை குறிக்கிறது. முன்னால் எதற்காக இருக்கிறது எனில், இவைகளை என்னால் எளிதில் பார்க்க முடிகிறது. பின்னால் கழுத்துப் பட்டையில் உள்ள சிறிய ஒட்டு என்னுடைய பாவத்தைக் குறிக்கிறது. அது ஏன் பின்னால் இருக்கிறது என்றால், என்னால் அதனைப்பார்க்க முடியாது என்று'' கூறினான். வேதாகமம் "உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்'' (எண். 32:23) என்கிறது. ""என்னுடைய பாவம்'' என்ற பதம் வேதாகமத்தில் இருபத்தொரு முறை சொல்லப் பட்டிருக்கிறது. நாம் சாதாரணமாக மற்றவர்களுடைய பாவத்தைத் தான் பார்க்கிறோமே தவிர நம்முடைய பாவங்களை நாம் எண்ணிப்பார்ப்பது இல்லை. வேதாகமத்தில் இரண்டே இரண்டு பேர்கள் ""என்னுடையபாவம், என்னுடைய அக்கிரமம்'' என்று கூறுவதை பார்க்கிறோம். முதலாவது தாவீது, இரண்டாவது யோபு. இவர்களை போல நாமும் நம்முடைய பாவங்களை நோக்கிப் பார்த்து பாவங்களை விட்டு விலகுவோம்

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create